Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! முத்தாலபரமேஸ்வரி கோயிலில் பூச்சொரிதல் விழா! முத்தாலபரமேஸ்வரி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேல்மலையனூர் அங்காளம்மன் ஊஞ்சல் உற்சவம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 மார்
2015
03:03

செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நேற்று இரவு நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் ஒரு மணி நேரம் முன்னதாக உற்சவத்தை துவக்கினர். விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நேற்று இரவு அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது.

Default Image
Next News

அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து தங்க கவசம் அணிவித்தனர். இரவு 9 மணி முதல் கூட்டம் அலை மோதியது. இதனால் இரவு 12 மணிக்கு துவங்கும் ஊஞ்சல் உற்சவத்தை போலீசார் கேட்டு கொண்டதால் ஒரு மணி நேரம் முன்னதாக துவக்கினர். ஊஞ்சல் மண்டபத்தில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளியதும், பக்தர்களும், கோவில் பூசாரிகளும் பக்தி பாடல்களையும், தாலாட்டு பாடல்களையும் பாடினர். இரவு 12.40 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நிறைவடைந்தது.  இந்து சமாய அறநிலையத்துறை உதவி ஆணையர்  பிரகாஷ்,  அறங்காவலர் தலைவர் வடிவேல், தலைமை பூசாரி சேகர் மற்றும் அறங்காவலர்கள், மேலாளர்கள் முனியப்பன், மணி உட்பட பலர் கலந்து கொண்டனர். செஞ்சி டி.எஸ்.பி., முரளிதரன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கடலுõர் எஸ்.பி., ராதிகா பாதுகாப்பு பணிகளை மேற்பார்வை செய்தார். பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இன்று சனிக்கிழமை தெலுங்கு வருடபிறப்பும், நாளை ஞாயிற்றுக்கிழமை என இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால் வழக்கத்தை விட கூடுதலாக பக்தர்கள் குவிந்திருந்தனர். இதனால் கோவில் பகுதி மட்டுமின்றி மேல்மலையனூரின் சாலைகளிலும் நெரிசல் காணப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar