Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கம் சென்ற ஆண்டாள் பட்டு! ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நாளை சித்திரை தேரோட்டம்! ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நாளை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் சித்திரை தெப்பத்திருவிழா!
எழுத்தின் அளவு:
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் சித்திரை தெப்பத்திருவிழா!

பதிவு செய்த நாள்

17 ஏப்
2015
11:04

நாகர்கோவில் : சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் சித்திரை தெப்பத்திருவிழா வருகிற 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. முன்னதாக 19-ம் தேதி காலை கொடி கயிறுக்கு மஞ்சள் வாங்கும் நிகழ்ச்சியும், மாலையில் கொடிப்பட்டத்தை பட்டாரியார் சமுதாயத்தினர் மரபுப்படி கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

கொடியேற்று விழாவையொட்டி 20-ம் தேதி காலை 7- மணிக்கு திருமுறை பாராயணமும், 9 -மணிக்கு திருக்கொடியேற்றமும் நடக்க உள்ளது. 21-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு விநாயகர் மூஷிக வாகனத்தில் திருவீதி உலா வருதலும், காலை 8 மணிக்கு பூங்கோல வாகனத்தில் சந்திரசேகரர் திருவீதி உலா வருதலும், இரவு 9மணிக்கு புஷ்பக விமான வாகனத்தில் சுவாமியும், அம்பாளும் வீதிஉலா வருதலும் நடக்கிறது. 23-ம் தேதி காலை 8 மணிக்கு பூத வாகனத்தில் சுவாமி விதி உலா வருதலும், இரவு 9 மணிக்கு பறங்கி நாற்காலி வாகனத்தில் சுவாமி வீதி உலா வருதலும், 24-ம் தேதி 5.30 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமி வீதி உலா வருதலும், மாலை 5 மணிக்கு ஊஞ்சல் உற்சவ மூர்த்திக்கு அஷ்டாபிஷேகமும், இரவு 9 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமி வீதி உலா காட்சியும் நடக்கிறது. 27-ம் தேதி காலை 5 மணிக்கு சிதம்பரேஸ்வரர் வீதி உலா காட்சியும், 10-மணிக்கும், மாலை 4 மணிக்கும் அலங்கார மண்டபத்தில் வைத்து, நடராஜ பெருமாளுக்கும், சிவகாமி அம்பாளுக்கும் அஷ்டாபிஷேகமும் நடக்கிறது.

28-ம் தேதி காலை 7.30 மணிக்கு திருத்தேர் வடம் தொட்டு இழுக்கும் தேரோட்டம் நடக்கிறது. இதில் அம்மன் தேர், பிள்ளையார் தேர், இந்திரன் தேர் ஆகிய 3 தேர்கள் உலா வருகின்றன. மாலை 6 மணிக்கு சுவாமி மண்டக படிக்கு தந்தப் பல்லாக்கில் எழுந்தருளல், இரவு 9-8-மணிக்கு பக்தி இன்னிசை, 10 மணிக்கு ரிஷப வாகனத்தி, சுவாமி திருவீதி உலா வருதல், 11 மணிக்கு சப்தாவர்ண காட்சி ஆகியவை நடக்கிறது.

29-ம் தேதி மாலை 6 மணிக்கு சமய சொற்பொழிவும், இரவு 8 மணிக்கு புல்லாங்குழல் இசையும், அதன் பின்னர் தெப்பத்திற்கு சுவாமியும், அம்பாளும், பெருமாளும் எழுந்தருளி தெப்பத்திருவிழா நடக்கிறது. நள்ளிரவு 12-மணக்கு திரு ஆராட்டு ஆகியவை நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர், கண்காணிப்பாளர் சிவராமசந்திரன், மேலாளர் ஆறுமுக நயினார் கணக்கர் கண்ணன் மற்றும் பக்த சங்கத்தினரும், பக்தர்களும் இணைந்து செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி மகா யாகம் ... மேலும்
 
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar