Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடவெட்டி அங்காளம்மன் கோவிலில் ... புதுச்சேரி அங்காளம்மன் கோவிலில் தீச்சட்டி ஊர்வலம்! புதுச்சேரி அங்காளம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சோமநாதீஸ்வரர் கோவிலில் 100 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
சோமநாதீஸ்வரர் கோவிலில் 100 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம்!

பதிவு செய்த நாள்

20 ஏப்
2015
11:04

கள்ளக்குறிச்சி: சோமண்டார்குடியில், கி.பி., 7ம் நுாற்றாண்டில் சோழ மன்னரால் கட்டப்பட்ட சோமநாதீஸ்வரர் கோவில்  மகா கும்பாபிஷேகம், 100  ஆண்டுகளுக்குப்பின், மே மாதம் 1ம் தேதி நடக்கிறது. விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியிலிருந்து 5 கி.மீ., தொலைவில் உள்ள ÷ சாமண்டார்குடியில், கி.பி., 7ம் நுாற்றாண்டில் செங்கற்கள் மூலம் லோகாம்பாள் உடனுறை சோமநாதீஸ்வரர் கோவில் கட்டப்பட்டது. கி.பி., 10ம்  நுாற்றாண்டில் பராந்தக சோழனால், இக் கோவில் முற்றிலும் கருங்கல்லால் புனரமைக்கப்பட்டது. வேத குருவின் சாபத்தால் தனது கலையை இழந்து  பரிதவித்த சந்திரன், கோ (பசு)வின் வாயிலிருந்து வெளிப்பட்ட கோமுகி நதியில் நீராடி, சோமண்டார்குடியில் உள்ள சோமநாதீஸ்வரரை பூஜித்து,  சாப விமோசனம் பெற்றதாக புராணம் கூறுகிறது. கோவில் மூல விமானத்தில் ரிஷபாரூடத்தில் எழுந்தருளிய சிவன் பார்வதி சிற்பம் இன்றும் காட்சி  தருகிறது. சந்திரன் (சோமன்) வழிபட்டதால், சோமநாதீஸ்வரர் என்ற பெயர் இறைவனுக்கு வந்ததுடன், இறைவன் பெயராலே இவ்வூர் ÷ சாமண்டார்குடி (சந்திரன் தங்கியது) என அழைக்கப்படுகிறது. இக்கோவிலில் சூரியனுக்கு பூஜை உண்டு; சந்திரனுக்கு பூஜை இல்லை. ஆதிசங்கரர்  பூஜித்த பெருமையும் இத் தலத்திற்கு உண்டு. இக்கோவிலின் தொன்மை மாறாமல் புனரமைக்கப்பட்டு, வரும் மே மாதம் 1ம் தேதி கும்பாபிஷேகம்  செய்யப்பட உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் உலக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar