Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இன்று.. மாங்கல்ய பலம் தரும் வாசவி ... பக்தர்கள் சாப்பிட்ட இலைகளில் அங்கபிரதட்சணம் செய்து நேர்த்திக்கடன்! பக்தர்கள் சாப்பிட்ட இலைகளில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மீனாட்சிக்கு நடந்தது பட்டாபிஷேகம்: மதுரையில் துவங்கியது அம்மனின் ஆட்சி!
எழுத்தின் அளவு:
மீனாட்சிக்கு நடந்தது பட்டாபிஷேகம்: மதுரையில் துவங்கியது அம்மனின் ஆட்சி!

பதிவு செய்த நாள்

29 ஏப்
2015
10:04

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் எட்டாம் நாள் நிகழ்ச்சியாக பட்டாபிஷேகம் நேற்றிரவு வெகு விமரிசையாக நடந்தது. ரத்தினக்கற்கள் பதித்த ராயர் கிரீடம், செங்கோலுடன் மீனாட்சி அம்மன் மாசிவீதிகளில் எழுந்தருளி அருள்பாலித்தார். பட்டாபிஷேகம் விழாவிற்காக அம்மன் சன்னதி ஆறுகால் பீடம் ஏழு வகை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. வெள்ளி சிம்மாசனத்தில் சிவப்பு பட்டுடுத்தி, பச்சை பட்டு தலைப்பாகையுடன் அம்மன் சர்வ அலங்காரத்தில் நேற்று மாலை 6 மணிக்கு எழுந்தருளினார். விக்னேஸ்வர பூஜையுடன் பட்டாபிஷேக விழா துவங்கியது. புண்ணியாகவாசனம், பஞ்சகவ்ய பூஜை, தீபராதனைகள் நடந்தன.அனிக்கை விநாயகர் கோயிலில் இருந்து ரத்தினக்கற்கள் பதித்த ராயர் கிரீடம், செங்கோல் கொண்டு வரப்பட்டது. கிரீடத்திற்கு புனித நீரூட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. ஸ்தானிகம் பட்டர்கள் செந்தில்பட்டர், சி.எம்.எஸ்.குமார் பட்டர் தலைமையில் அம்மனுக்கு இரவு 7.40 மணிக்கு கிரீடம் சூட்டப்பட்டது. செங்கோல் வழங்கப்பட்டது. கோயில் சார்பில் காப்பு கட்டிய விவேக் (எ) கணபதி சுந்தரம் பட்டர் தீபாராதனைகள் காண்பித்தார்.

மதுரை அரசாளும் மீனாட்சி: பட்டாபிஷேகத்தை ஏற்ற மீனாட்சி அம்மன் மதுரை ஆட்சிப்பொறுப்பை ஏற்றார் என்பதும், சித்திரை முதல் ஆவணி வரை நான்கு மாதங்கள் அம்மன் ஆட்சி நடைபெறுவதாகவும் ஐதீகம். மீனாட்சி அம்மன் பட்டம் சூட்டியதை பறைசாற்றும் விதமாக அம்மன் பிரதிநிதியாக தக்கார் கருமுத்து கண்ணன், அம்மனிடம் இருந்து செங்கோலை பெற்று சகல விருதுகளுடன் சுவாமி சன்னதியின் இரண்டாம் பிரகாரத்தை வலம் வந்து செங்கோலை மீண்டும் அம்மனிடம் வழங்கினார்.வெள்ளி சிம்மாசன வாகனத்தில் மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுவாமி நேற்றிரவு மாசிவீதிகளில் எழுந்தருளினர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இன்று திக்கு விஜயம்: சித்திரை திருவிழாவின் ஒன்பதாம் திருநாளான இன்று (ஏப்.,29) வடக்கு - கீழமாசி வீதி சந்திப்பில் உள்ள லாலாஸ்ரீரெங்க சத்திரத்தில் மாலை 6 மணிக்கு திக்கு விஜயம் நடக்கிறது. நாளை (ஏப்.,30) கோயிலுக்குள் வடக்காடி வீதியில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் காலை 9 மணிக்கு மேல் 9.30 மணிக்குள் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் பூப்பல்லக்கில் கள்ளழகர் திருக்கோலத்தில் அழகர்கோவில் புறப்பட்டார் ... மேலும்
 
temple news
அன்னூர்: கதவுகரை, பகவதி அம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா நேற்று நடந்தது.கதவுகரையில், 250 ஆண்டு பழமையான ... மேலும்
 
temple news
அவிநாசி:  அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சிவாச்சாரியார்கள் சமூகம் சார்பில் மஞ்சள் நீர் உற்சவம் ... மேலும்
 
temple news
கூடலுார்: மங்கலதேவி கண்ணகி கோயிலில் பகலில் காட்டு யானைகள் உலா வந்தன.தமிழக கேரள எல்லையில் உள்ள ... மேலும்
 
temple news
பந்தலூர்: பந்தலூர் அருகே சேரம்பாடி பகுதியில், கோவில் திருவிழாவில் பறவை காவடி ஊர்வலத்தில் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar