Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலையில் அண்ணாமலையாரை ... கரிவரதராஜப்பெருமாள் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்! கரிவரதராஜப்பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பூர் அருகே பழமையான அய்யனார் சிலை கண்டுபிடிப்பு!
எழுத்தின் அளவு:
திருப்பூர் அருகே பழமையான அய்யனார் சிலை கண்டுபிடிப்பு!

பதிவு செய்த நாள்

05 மே
2015
11:05

திருப்பூர் : திருப்பூர் அருகே, ஆயிரம் ஆண்டு பழமையான அய்யனார் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. திருப்பூர் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தினர், கண்டியன்கோவில், கோவில்பாளையம் கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டனர். வணிகப்பெரு வழியருகே வழிபாட்டில் உள்ள ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய, இரண்டு அய்யனார் சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஆய்வு மைய தொல்லியல் ஆய்வாளர் ரவிக்குமார் கூறியதாவது: தமிழகத்தின் பண்டைய வணிக பெருவழிகளில் முக்கியமானது, ராசகேசரி பெருவழி. இதில், கோவில்பாளையம், கண்டியன் கோவிலில் இரு சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன. 100 செ.மீ., உயரம்; 95 செ.மீ., அகலம்; 35 செ.மீ., கணம் உள்ள இரண்டு சிற்பங்கள் காணப்படுகின்றன.சங்க காலத்தில் சாத்தன் எனவும், சோழர் காலத்தில் இருந்து அய்யனார் எனவும், குறிப்பிடப்படுகிறது. கோவில்பாளையம் அய்யனார், பீடத்தின் மீது, வலது காலை மடித்தும், இடது காலை குத்திட்டு, அதன் மீது இடது கையை வைத்தபடியும், வலது கையில் செண்டு (ஆயுதம்) பிடித்தபடி, மகாராஜ லீலாசனத்தில் உள்ளார்.கண்டியன் என்பது, ருத்திராட்ச மாலை அணிந்த சிவபெருமானை குறிக்கிறது; இக்கிராமம் கண்டியன் கோவில் என பெயர் பெற்றது. இங்குள்ள அய்யனார், வலது கையில் அபயஹஸ்தம் முத்திரை காட்டி அருள்பாலிக்கும் நிலையிலும், தலையின் இருபுறமும் திரிசடை, சுருள்சடை அடர்த்தியாகவும், அழுத்தமாகவும் தொங்கி அமைந்த ஜடாபாரம் கோலத்தில் உள்ளார்.அய்யனார் பீடத்தில் அமர்ந்த நிலையில் பூரணை, புஷ்பகலை என்ற இரு மனைவியர் உள்ளனர். பெண்கள் சாமரம் வீசிக்கொண்டுள்ளனர். பீடத்தின் கீழ் நாயும், பன்றியும் விளையாட, வலதுபுரம் அய்யனாரின் வாகனமான யானை உள்ளது. இந்த அமைப்பு முறையை ஆய்வு செய்தபோது, பிற்கால சோழர் காலத்தை சார்ந்த சிற்பங்கள் என அறிய முடிகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா இன்று காலை நம்மாழ்வார் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் மார்கழி எண்ணெய் ... மேலும்
 
temple news
குன்னூர்; படுக இன மக்களின் பாரம்பரிய ஹெத்தையம்மன் திருவிழாவின் ஒரு பகுதியாக, ஜெகதளா கிராமத்தில், ... மேலும்
 
temple news
திருக்கோஷ்டியூர்; திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயில் அஷ்டாங்க விமானத் தங்கத் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: புதுச்சேரிக்கு நேற்று வருகை தந்த அகோபில மடம் சுவாமி, முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar