Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செல்லியம்மன் கோவில் கும்பாபிஷேகம் சூடு பிடிக்குமா ராமேஸ்வரம் கோயில் கும்பாபிஷேகப்பணிகள்! சூடு பிடிக்குமா ராமேஸ்வரம் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி பெரியாவுடையார் கோயிலில் 22 ஆண்டுக்குபின் கும்பாபிஷேகம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பழநி பெரியாவுடையார் கோயிலில் 22 ஆண்டுக்குபின் கும்பாபிஷேகம்!

பதிவு செய்த நாள்

23 மே
2015
11:05

பழநி: பழநி பெரியாவுடையார் கோயிலில் 22 ஆண்டுகளுக்குப் பின் நேற்று நடந்த கும்பாபிஷேகத்தில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.  பழநியில் உள்ள கோதைமங்கலம் சண்முகநதிக்கரையில் அமைந்துள்ள பெரியாவுடையார் சிவன்கோயில், 1000 ஆண்டுகளுக்கு முன் சேரர், சோழர், பாண்டிய மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்டது. இக்கோயிலில் கடந்த 1993ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பின் ரூ.85 லட்சம் செலவில் கோயிலில் திருப்பணிகள் நடந்தது. கும்பாபிஷேக விழாவையொட்டி திருச்செங்கோடு, கும்பகோணம், காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களிலிருந்து வந்திருந்த சிவாச்சாரிகள், யாகசாலைகளில் மே 15 முதல் ஆறுகால யாகபூஜை, வேதபாராயணம், திருமுறை மந்திரங்கள் ஓதினர். மூலவர் பெரியாவுடையார், தெட்சணாமூர்த்தி, பிரம்மா, விஷ்ணு, ருத்திரர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு மருந்து சாத்தப்பட்டு கும்பகோணத்திலிருந்து புதிதாக வந்த கோபுரக்கலசங்கள் பொருத்தப்பட்டுள்ளது. நேற்று கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அதிகாலை 4.30மணிக்கு ஆறாம்கால பூஜையும், பிம்பசுத்தி காப்புகட்டுதல் செய்யப்பட்டது. காலை 8மணிக்கு யாகசாலையிலிருந்து சக்திகும்பம் உள்ளிட்ட கலசங்கள், சிறப்புபூஜைக்குப்பின், மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. காலை 8.30 மணிக்கு பெரியாவுடையார், பரிவாரதெய்வங்களின் கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து காலை 8.45 மணிக்கு மூலவர் பெரியாவுடையாருக்கு கும்பாபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது.மாலை 5 மணிக்கு வெள்ளி ரிஷபவாகனத்தில் சுவாமிபுறப்பாடு நடந்தது. விழாவையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. சண்முகநதி படித்துறையில் தீயணைப்பு துறையினர் ரப்பர் படகு மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று (அக்.11ல்) நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: பகவத் கீதை உலக நன்மையையும், மனித வாழ்வுக்கான வழிமுறைகளையும் எடுத்துக் கூறுகிறது. ... மேலும்
 
temple news
தூத்துக்குடி: குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கொளுத்தும் வெயிலிலும் பல்லாயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar