Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அத்தி வினாயகர் கோவில் மகா ... கோவில் தீமிதி திருவிழா கோலாகலம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆண்டுவருவாய் அதிகரித்த 46 கோவில்களின் தரம் உயர்வு!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 மே
2015
11:05

காஞ்சிபுரம்: ஆண்டு வருவாய் அதிகரித்ததால், காஞ்சிபுரம் மாவட்டத்தில், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, 46 கோவில்கள், தரம் உயர்த்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள, இந்து கோவில்களுக்கு சொந்தமான சொத்துகளை பாதுகாப்பது, கோவில்களை பராமரிப்பது மற்றும் நிர்வாகத்தை கவனிப்பது போன்ற பணிகளை, இந்து சமய அறநிலையத் துறை செய்து வருகிறது.

1,384 கோவில்கள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில், மொத்தம் 1,384 கோவில்கள் உள்ளன. இந்த கோவில்கள், நிர்வாக வசதிக்காக, 6 கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

தரம் பிரிப்பு: கோவில் வருமானத்திற்கு ஏற்றவாறு, கோவில்கள் தரம் பிரிக்கப்படுகின்றன. ஆண்டு வருவாய் 10 ஆயிரத்திற்கு மேல் 2 லட்சம் ரூபாய் வரை உள்ள கோவில்கள், 4வது நிலையிலும்; 2 லட்சம் ரூபாய்க்கு மேல் 10 லட்சம் ரூபாய் வரை வருவாய் இருந்தால், 3வது நிலையிலும்; 10 லட்சம் ரூபாய்க்கு மேல் 25 லட்சம் ரூபாய் வருவாய் இருந்தால், 2வது நிலையிலும் 25 லட்சத்தில் இருந்து ஒரு கோடி ரூபாய் வரை வருவாய் இருந்தால், அது 1வது நிலையிலும் சேர்க்கப்படும். அந்த வகையில், மாவட்டத்தில் போதிய வருவாய் இன்றி, 1,164 கோவில்கள், எந்த பட்டியலிலும் சேராமல் இருந்தன. இவற்றில், 34 கோவில்களில் ஆண்டு வருவாய் 10,000 ரூபாய்க்கு மேல் அதிகரித்ததால், அந்த கோவில்கள் தற்போது தரம் உயர்த்தப்பட்டு, துறையின் 4வது நிலை பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

3வது நிலை: இதேபோல், 10 ஆயிரம் ரூபாயில் இருந்து, 2 லட்சம் ரூபாய் வரை வருவாய் உடைய 4வது நிலை பட்டியலில் இருந்த, திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோவில்; சீட்டணஞ்சேரி காளீஸ்வரர் கோவில்; கடம்பாடி மாரி சின்னம்மன் கோவில்; சதுரங்கப்பட்டணம் மலைமண்டலப் பெருமாள் கோவில்; மதுரமங்கலம் எம்பார் வைகுண்ட பெருமாள் கோவில்; மலையம்பாக்கம் கோதண்டராம சுவாமி கோவில்; அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் கோவில் ஆகிய 7 கோவில்கள், தற்போது 2 லட்சம் ரூபாய்க்கு மேல் வருவாய் அதிகரித்து, 3வது நிலைக்கு, தரம் உயர்த்தப்பட்டுள்ளன. மேலும், 3வது நிலையில் இருந்த, காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில், அனுமந்தபுரம் அகோர வீரபத்திர சுவாமி கோவில், சிங்கப்பெருமாள்கோவில், பாடலாத்ரி நரசிங்கப் பெருமாள் கோவில், நெம்மேலி ஆளவந்தார் நாயக்கர் அறக்கட்டளை, திருநின்றவூர் பக்தவத்சல பெருமாள் கோவில் ஆகிய 5 கோவில்களின் ஆண்டு வருவாய் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளது. இதனால், இந்த கோவில்கள், 2வது நிலைக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: புதிய நடைமுறை: கடந்த ஆண்டு கணக்கெடுப்பின்போது, வருவாய் உயர்ந்ததாக கண்டறியப்பட்ட, 46 கோவில்கள், வருவாய் அடிப்படையில் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. தரம் உயர்த்தப்பட்ட இந்த 46 கோவில்களிலும், அதற்கு ஏற்ற வகையில், புதிய நடைமுறைகள், இந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar