Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வாலகுருநாதசுவாமி கோயிலில் வெள்ளி ... திருமறைநாதர் கோயிலில் வைகாசி விழா கொடியேற்றம்! திருமறைநாதர் கோயிலில் வைகாசி விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இடிந்த நிலையில் கிடக்கும் சேதுக்கரை ஸ்ரீனிவாசப்பெருமாள் கோயில் அர்த்த மண்டபம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
இடிந்த நிலையில் கிடக்கும் சேதுக்கரை ஸ்ரீனிவாசப்பெருமாள் கோயில் அர்த்த மண்டபம்!

பதிவு செய்த நாள்

23 மே
2015
03:05

கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டத்தில் பல வைணவத் திருக்கோயில்கள் உள்ளன. திருப்புல்லாணி அருகே சேதுக்கரை கடற்கரைக்கு செல்லும் வழியில் சின்னக்கோயில் என்றழைக்கப்படும் ஏகாந்த ஸ்ரீனிவாசப்பெருமாள் கோயில் வெளியே தெரியப்படாமல் மரங்களாலும், புதர்களாலும் சிறைப்பிடிக்கப்பட்டு மூலஸ்தான கோபுரக்கலசங்கள், கருவறை, முன்மண்டபம், அர்த்தமண்டபம், தாங்கி நிற்கும் சிற்பத்துõண்கள் பராமரிப்பின்றி மழை, வெயில், இயற்கை சீற்றங்கள் பாதிப்பிற்குள்ளானது குறித்து தினமலர் நாளிதழில் ஜன.17 அன்று படத்துடன் செய்தி வெளியானது. இச்செய்தியை கேள்விப்பட்டவுடன் ராமநாதபுரம் உழவாரப்பணிக்குழுவினர் செடிகளை அகற்றி துõய்மை செய்தனர். இந்நிலையில் (மே.16ல்) கடந்த வாரம் பெய்த மழைக்கு கோயின் கருவறை மற்றும் அர்த்த மண்டபத்தின் பின்புறப்பகுதிகள் முழுமையாக கீழே விழுந்து சேதமடைந்து கிடக்கிறது.

மழைகாலங்களில் நீரால் தேங்கி உள்ளது. திருக்கோஷ்டியூரை சேர்ந்த பட்டாச்சாரியார் ஒருவர் கூறுகையில், ஏகாந்த ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயில். சேது ஹிமாச்சலா என்று வேதங்களில் இந்தியாவின் கடைசி தெற்குப்பகுதியாக சேதுக்கரை கூறப்படுகிறது. இங்கிருந்துதான் இலங்கைக்கு கடலில் பாலம் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. சேதுக்கரை கடற்கரையில்தான் ராவணனின் தம்பி விபீஷணன் ராமபிரானிடம் சரணடைந்தார். ராமர் இங்கு வந்த போது தமிழ்முனிவர் அகத்தியர் ராமபிரானுக்கு ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரம் வழங்கியதாக கூறப்படுகிறது. இக்கோயிலில் ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரம் உச்சரித்து வழங்கப்படும் துளசி தீர்த்தம், கடுமையான காய்ச்சல், தலைவலியினை குணப்படுத்துவதாக நம்பப்படுகிறது. இக்கோயிலின் அருகே வெண்பளிங்கு அகத்தியர் கோயில் கும்பாபிஷேகம் கண்டுள்ளது. இவ்வளவு சிறப்புகளை தன்னகத்தே கொண்ட இக்கோயிலின் நிலையை காணும்போது கண்ணீரை வரவழைக்கிறது. தமிழக அரசின் இந்துசமய அறநிலையத்துறையுடன் இணைந்து சமஸ்தானம் தேவஸ்தான நிர்வாகத்தினர் பூர்வாங்கப் பணிகளை தொடங்கி, கும்பாபிஷேகத்திற்கு வழிகாணும் முயற்சியை எடுக்க வேண்டும். இதனால், பழமையான பெருமாள் கோயிலின் சிறப்புகளை வருங்கால சந்ததியினரும் அறிந்து கொள்ளலாம் என்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar