Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆலஞ்சேரி அவ்வையார் கோவிலில் ... பாடலீஸ்வரர் கோவிலில் பெருவிழா: கொடியேற்றத்துடன் துவங்கியது! பாடலீஸ்வரர் கோவிலில் பெருவிழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திரவுபதியம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம்!
எழுத்தின் அளவு:
திரவுபதியம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம்!

பதிவு செய்த நாள்

25 மே
2015
10:05

திருத்தணி: திரவுபதியம்மன் கோவில்களில், நேற்று நடந்த தீ மிதி திருவிழாவில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், காப்பு கட்டி தீமிதித்தனர். காலையில், துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. திருத்தணி ஒன்றியம், பட்டாபிராமபுரம் கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில், இந்தாண்டிற்கான தீ மிதி திருவிழா, கடந்த, 7ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி காலையில், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. மதியம், 1:30 மணி முதல், மாலை, 5:00 மணி வரை மகாபாரத சொற்பொழிவும், இரவு, 10:00 மணிக்கு நாடகமும் நடந்தது.  கடந்த, 18ம் தேதி, திரவுபதி கல்யாணம், 20ம் தேதி அர்ச்சுனன் தபசு நடைபெற்றது. விழாவின் நிறைவு நாளான நேற்று, தீ மிதி திருவிழா நடந்தது. காலை, 10:30 மணிக்கு கோவில் வளாகத்தில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து திரளான கிராம பெண்கள் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். மாலை, 6:30 மணிக்கு, 700க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி தீ மிதித்தனர். பின், உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதே போல், கனகம்மாசத்திரம் அடுத்த, ராமஞ்சேரி பகுதியில் உள்ள திரவுபதியம்மன் கோவிலிலும் நேற்று, தீ மிதி திருவிழா நடந்தது. காலை, 9:00 மணிக்கு, துரியோதனன் படுகளம், கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. பின், காலை, 10:30 மணிக்கு, திரளான பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிப்பட்டனர். மாலை, 6:00 மணிக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து தீ மிதித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி மகா யாகம் ... மேலும்
 
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar