திரவுபதியம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25மே 2015 11:05
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த, களக்காட்டூர் கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில் நடைபெற்று வரும் மகாபாரத அக்னி வசந்த விழாவில் நேற்று துரியோதனன் படுகளம் நடைபெற்றது. காஞ்சிபுரம் அடுத்துள்ள களக்காட்டூரில் திரவுபதியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் அக்னி வசந்த விழா, கடந்த 6ம் தேதி துவங்கியது. தொடர்ந்து நாள்தோறும் மகாபாரத சொற்பொழிவு மற்றும் நாடகம் நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான துரியோதனன் படுகளம் நேற்று நடைபெற்றது. நேற்று காலை 9:00 மணியளவில் திரவுபதியம்மன், தர்மராஜர் அப்பகுதி தெருக்களை வலம் வந்தனர். பின், 10:30 மணிஅளவில், கோவில் அருகில் உள்ள மைதானத்தில் வடிவமைக்கப்பட்டிருந்த துரியோதனன் உருவத்தை, திரவுபதியம்மன் சுற்றி வந்த பின் துரியோதனனை, பீமன் தன் தண்டாயுதத்தால் வதம் செய்யும் காட்சி நடைபெற்றது. நேற்று மாலை ஏராளமான பக்தர்கள், தீ மிதி திருவிழாவில் பங்கேற்று தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.