Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவாரூர் வல்லுடைய ஐயனார் கோவிலில் ... காரமடை அரங்கநாதர் கும்பாபிஷேக விழா துவக்கம்! காரமடை அரங்கநாதர் கும்பாபிஷேக விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவிந்தா கோஷம் முழங்க பவனி வந்த வீரராகவப் பெருமாள் தேர்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கோவிந்தா கோஷம் முழங்க பவனி வந்த வீரராகவப் பெருமாள் தேர்!

பதிவு செய்த நாள்

03 ஜூன்
2015
02:06

திருப்பூர்: வெங்கட்ரமணா கோவிந்தா கோஷங்களுக்கு மத்தியில்,  திருப்பூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில்  தேரோட்டம் நேற்று நடந்தது. திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வரர் மற்றும் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில் வைகாசி விகாச தேர்த்திருவிழா, 26ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம், விஸ்வேஸ்வரர் தேரோட்டம் நடைபெற்றது. நேற்று, ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில் தேரோட்டம், கோலாகலமாக நடைபெற்றது. ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீவீரராகவப் பெருமாள், ராஜ அலங்காரத்தில், தங்ககிரீடம் அணிந்திருந்தார். மதியம் 2:55 மணிக்கு, மேயர் விசாலாட்சி, துணை மேயர் குணசேகரன், கமிஷனர் அசோகன் உள்ளிட்டோர், வடம் பிடித்து துவக்கி வைத்தனர். பக்தர்களின் வெங்கட்ரமணா கோவிந்தா கோஷங்களுக்கு மத்தியில், தேர் அசைந்தாடி சென்றது.

மாலை, 5:45 மணியளவில், கோவில் தெற்கு கோபுர வாசலை வந்தடைந்தது. அங்கு, தெற்கு கோபுர வாசல் திறக்கப்பட்டு, சாயரட்சை பூஜை நடத்தப்பட்டது. மாலை, 6:10 மணிக்கு, பூ மார்க்கெட் சந்திப்பை சென்றடைந்தது. போதுமான அளவு சோடியம் விளக்கு ஏற்பாடு செய்யப்பட்டதால், தேர் எளிதாக கிழக்கு நோக்கி திரும்பியது. பூ மார்க்கெட் வியாபாரிகள், தேர் மீது மலர் துõவி வழிபட்டனர். 6:50 மணியளவில், நிலையை தேர் வந்தடைந்தது. தொடர்ந்து, மகா தீபாராதனை நடந்தது. இரவு, 8:00 மணிக்கு, சாந்தி பூஜையை தொடர்ந்து, சோமாஸ்கந்தர், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீவீரராகவப் பெருமாள், தேரில் இருந்து இறங்கினர். சப்பரத்தில் எழுந்தருளிய உற்சவ மூர்த்திகள், தேரோடிய வீதிகளில் உள்ள வண்டித்தாரை பார்க்கும் நிகழ்ச்சியும், அதை தொடர்ந்து, கோவிலுக்குள் எழுந்தருளலும் நடைபெற்றது. விஸ்வேஸ்வரரும், ஸ்ரீவீரராகவப் பெருமாளும், தம்பதி சமேதராக குதிரை வாகனத்தில் எழுந்தருளி, ஆறு தாண்டிச் செல்லும் பரிவேட்டை நிகழ்ச்சி, இன்று நடைபெற உள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூர் சத்திய ஞான சபையில் இன்று நடந்த மாதந்திர ஜோதி தரிசனத்தை காண பக்தர்கள் ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar