Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவிந்தா கோஷம் முழங்க பவனி வந்த ... திரவுபதியம்மன் -அர்ச்சுனன் திருக்கல்யாண உற்சவம்! திரவுபதியம்மன் -அர்ச்சுனன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரமடை அரங்கநாதர் கும்பாபிஷேக விழா துவக்கம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காரமடை அரங்கநாதர் கும்பாபிஷேக விழா துவக்கம்!

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2015
10:06

மேட்டுப்பாளையம் : காரமடையில் நேற்று மாலை நடந்த முளைப்பாரி மற்றும் தீர்த்தக்குடங்கள் ஊர்வலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். காரமடை அரங்கநாதர் கோவில் மகாகும்பாபிஷேகம் வரும், 7ம் தேதி நடக்கிறது. விழாவின் துவக்க நாளான நேற்று மாலை, 5:00 மணிக்கு, காரமடை அருகேவுள்ள பெட்டத்தம்மன் கோவில் மலை அடிவாரத்தில் இருந்து, தீர்த்த குடங்கள், முளைப்பாரி ஊர்வலம் துவங்கியது. ஊர்வலத்தின் முன், இரு குதிரைகள் நடனமாடிச் சென்றன. தொடர்ந்து, யானை மீது தீர்த்தக்குடம் எடுத்து வரப்பட்டது. யானையின் பின்னால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள், முளைப்பாரியையும், தீர்த்தக்குடங்களையும் எடுத்து வந்தனர். தாரை தப்பட்டை, வாத்திய இசை, செண்டை மேளம் முழங்க ஊர்வலம் காரமடையை நோக்கி வந்தது. பெட்டத்தம்மன் மலை அடிவாரத்தில் இருந்து, பெட்டதாபுரம், கோவை மெயின் ரோடு வழியாக, ஊர்வலம் காரமடைக்கு வந்தது. ஐந்துமுக்கு பகுதிக்கு வரும் போது, மழை பெய்யத் தொடங்கியது. பெண்கள் கொட்டும் மழையில் நனைந்து கொண்டு, தேர் செல்லும் நான்கு வீதிகள் வழியாக சென்று, கோவிலை அடைந்தனர்.பக்தர்களுக்கு கோவில் சார்பில், அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று காலை, 9:00 மணிக்கு மகா சுதர்ஸன ஹோமத்துடன், கும்பாபிஷேக பூஜை துவங்குகிறது. விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் நந்தகுமார் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
புரட்டாசி மகாளய பட்சத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி இந்திர ஏகாதசி எனப்படுகிறது. நம் முன்னோர்களின் ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 
temple news
சென்னை பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சேவையை அக்டோபர் 11ம் தேதி துவங்கி வைக்க சென்னை வருகிறார் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar