Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நவக்கிரக கோவில் கும்பாபிஷேக விழா திரவுபதி அம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கரிவரதராஜ பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2015
11:06

நெகமம்: நெகமம் அருகேயுள்ள பனப்பட்டியில் நேற்று கரிவரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.நெகமம் அருகேயுள்ள பனப்பட்டியில், மிகவும் பழமை வாய்ந்த கரிவரதராஜ பெருமாள் கோவில் புதுப்பிக்கும் பணி நடந்தது. அதில், புதிதாக கருங்கல் திருக்கோவில், கருவறை, விமானம், அர்த்த மண்டபம், கருடகம்பம் போன்ற பணிகள் நிறைவுபெற்றது. இதனைத்தொடர்ந்து கும்பாபிஷேகம் செய்வது என முடிவு செய்யப்பட்டது.அதன்படி, கடந்த 5ம் தேதி மாலை, 3:00 மணிக்கு விநாயகர் கோவிலில் இருந்து புனித தீர்த்தம், முளைப்பாலிகை எடுத்து வருவதல் நிகழ்ச்சி நடந்தது. பின், மாலை 5.00 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, புனிதநீர் வழிபாடு, ஆணைந்து வழிபாடு, தும்பிக்கை ஆழ்வார் வழிபாடு, ஐம்பூத வழிபாடு, திருமகள் வழிபாடு, நிலத்தேவர் வேள்வி, மண் எடுத்தல் போன்றவை நடந்தன. இரவு 7.00 மணிக்கு முதல்கால வேள்வி பூஜை நடந்தது. பின், ஜூன் 6ம் தேதியன்று காலை 6.00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, மங்கள இசையை தொடர்ந்து, காலை 9.30 மணிக்கு இரண்டாம் கால வேள்வி பூஜை நடந்தது. மாலை 6.00 மணிக்கு மூன்றாம் கால வேள்வி பூஜை நடந்தது. இரவு 10.00 மணியளவில் சிலைகளுக்கு எண்வகை மருந்து சாத்தப்பட்டது. நேற்று காலை, 4:30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, மங்கள இசையை தொடர்ந்து, காலை 5.00 மணிக்கு நான்காம் கால வேள்வி பூஜையும், காலை, 6:30 மணிக்கு கோபுர கலசத்திற்கு குமரகுருபர சுவாமிகள், மருதாசல அடிகள் ஆகியோரால் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். இதில், பனப்பட்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பின், பக்தர்கள் மீது கும்பாபிஷேக நீர் தெளிக்கப்பட்டது. மூலவருக்கு புனித நீர் ஊற்றி அபிசேகம் செய்து, அலங்காரம் செய்து தீபாராதனை செய்யப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி மகா யாகம் ... மேலும்
 
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar