Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

உலக நலன் வேண்டி பழநியில் ... காமாட்சியம்மன் கோவில் விழா:அபிஷேகம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் திருக்கல்யாண மண்டபம் திறக்கப்படுமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜூன்
2015
10:06

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் திருக்கல்யாண விழா, மூடி கிடக்கும் திருகல்யாண மண்டபத்தில் நடத்திட, முதல்வர் ஜெ., உத்தரவிட வேண்டும் என பக்தர்கள் தெரிவித்தனர். ராமேஸ்வரம் கோயிலில் ஆடி திருக்கல்யாணம், மாசி திருவிழா விமரிசையாக கொண்டாடபடுகிறது. இதில் ஆடி திருக்கல்யாண விழா, கடந்த சில ஆண்டுகளாக கோயில் மூன்றாம் பிரகாரத்தில் நடப்பதால் இட நெருக்கடியில் சிக்கி பக்தர்கள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இதை தவிர்க்க கோயில் கோசாலை அருகே ஒரு கோடி ரூபாய் செலவில் திருக்கல்யாண மண்டபம் அமைக்கப் பட்டது. 20 மாதங்கள் ஆகியும் இன்னும் திறக்கப் படாததால் மண்டபத்திற்குள் தூசு படிந்துள்ளது. இன்னும் சில வாரங்களில் ஆடி திருவிழா துவங்க உள்ள நிலையில் திருக்கல்யாண மண்டபத்தை திறக்க இந்து அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து இந்து முன்னணி ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி கூறியதாவது: நன்கொடை யாளர்கள் மூலம் கட்டிய திருக்கல்யாண மண்டபம் 20 மாதமாக மூடிக் கிடப்பதால், நன்கொடை யாளர்கள், பக்தர்கள் வேதனை படுகின்றனர். இந்நிலை நீடித்தால், இனி வரும் காலத்தில் கோயிலுக்கு நன்கொடை கொடுக்க தயங்குவர். ஆடி திரு விழாவில் சுவாமி, அம்பாள் திருக் கல்யாணத்தை புதிய மண்டபத்தில் நடத்திட தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
தேவகோட்டை: கோட்டூர் முத்து மாரியம்மன் கோயில் பங்குனி முளைக்கொட்டு திருவிழா 23ம் தேதி காப்புக் ... மேலும்
 
temple news
மீஞ்சூர்: மீஞ்சூர் ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோவில் பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, தேர் திருவிழா நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar