Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மதுரைவீரன் கோவில் கும்பாபிஷேகம்! பருமகுரு பெருமான் ஸ்ரீமத் சாது ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செஞ்சி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூன்
2015
12:06

செஞ்சி: செஞ்சி பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது. செஞ்சி காமாட்சியம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர்  கோவிலில் நேற்று காலையில் ஏகாம்பரேஸ்வரர், காமாட்சியம்மன், நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். மாலை 3:00 மணிக்கு நந் தீஸ்வரருக்கு பால் அபிஷேகம் நடந்தது. ஏராளமான பெண்கள் அகல் விளக்கேற்றி வழிபட்டனர். பூஜைகளை கிரிசங்கர் குருக்கள் செய்தார். பீரங்கி மேடு அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பெண்கள் அகல் விளக்கேற்றி வழிபட்டனர். அருணாச்சலேஸ்வரர், அபிதகுஜலாம்பாள் மற்றும் நந் தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்தனர். மாலை 6:00 மணிக்கு, சாமி கோவில் உலா நடந்தது. திருப்பணிக்குழு தலைவர் டாக்டர்  ரவிச்சந்திரன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  பிரசாத வினியோகம் நடந்தது. முக்குணம் முக்குன்ற நாத உடையார் கோவிலில்,  முக்குன்ற நாதர் மற்றும் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். மகா தீபாராதனையும், சாமி கோவில் உலாவும் நடந் தது.பக்தர்களுக்கு பிரசாத விநியோகம் செய்தனர். உபயதாரர்கள் தயாளன், ஆதிலட்சுமி, நிர்வாகிகள் பச்சைவண்ணன் செல்லக்குட்டி, பழனி,  சண்முகம், நாராயணசாமி மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலச்சேரி பிரகன்நாயகி உடனுறை மத்தளேஸ்வரர் குடைவரை கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு மத்தளேஸ்வரர், பிரகன்நாயகி, நந்தீஸ்வர ருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். மகா தீபாராதனையும், பிரசாத வினியோகமும் நடந்தது. பெண்கள் அகல் விளக்கேற்றி  வழிபட்டனர். பூஜைகளை சிவநாதன் குருக்கள் செய்தார். பெருவளூர் கோகிலாம்பாள் உடனுறை கோட்டீஸ்வரர் கோவிலில், மூவவர் மற்றும் நந் தீஸ்வரருக்குசிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். பெண்கள் அகல் விளக்கேற்றி வழிபட்டனர். மாலை 6:00 மணிக்கு சாமி கோவில் உலா  நடந்தது. பக்தர்களுக்கு பிரசாத விநியோகம் நடந்தது. திருப்பணிக்குழு தலைவர் ஜம்புலிங்கம், ஊராட்சி தலைவர் ராதிகா ரேணுகோபால், கவுன்சிலர்  தனபாக்கியம் அண்ணாமலை, கூட்டுறவு சங்க தவைவர் மண்ணம்மாள் ஆத்மநாதன் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
வாரணாசி: பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருவாரூர்: ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருநெல்லிகாவல் நெல்லிவன நாதர் சுவாமி ஆலய திருத்தேரோட்டம் இன்று ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: திருவையாறு ஐயாறப்பர் கோவில் சித்திரை தேரோட்டம் வெகு விமர்சையாக நடந்தது. இதில் ஏராளமான ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: உளுந்தூர்ப்பேட்டை கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை தேரோட்டம் இன்று நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar