பதிவு செய்த நாள்
11
ஜூலை
2011
11:07
அம்பாசமுத்திரம் : அம்பாசமுத்திரம் சித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகத்தில் திராளன பக்தர்கள் கலந்து கொண்டனர். அம்பாசமுத்திரம் சித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதில் சைவ வேளாளர் சங்க மாநில தலைவர் கணபதி சந்தானம், மாநில பொது செயலாளர் காந்தி, அம்பாசமுத்திரம் பேரவை தலைவர் வக்கீல் கணேசன், செயலாளர் சிதம்பரம், இணை செயலாளர் ஆறுமுகநயினார், துணை செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் ஆறுமுகநயினார், இந்து ஆலய பாதுகாப்பு குழு மாநில பொறுப்பாளர் சங்கரநாராயணன், கும்பாபிஷேக குழு தலைவர் வக்கீல் காந்திமதிநாதன், துணை தலைவர் நெல்லையப்பன், அம்பாசமுத்திரம் நகராட்சி தலைவர் பிரபாகரப்பாண்டியன், கவுன்சிலர் சிவசுப்பிரமணியன், காசிநாத சுவாமி கோயில் அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் வாசுதேவராஜா, கிருஷ்ண சுவாமி கோயில் அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் பண்ணை சந்திரசேகரன், ஐயப்பா சேவா சங்க செயலாளர் சண்முகம், வக்கீல்கள் செல்வராஜ், ராமசுப்பிரமணியன், சங்கரநாராயணன், டாக்டர்கள் பானுமதி, சிதம்பரவடிவு, காசிவிஸ்வநாதன், நகர அதிமுக செயலாளர் ஆறுமுகம், தீர்த்தபதி மேல்நிலைப் பள்ளி நிர்வாக குழு தலைவர் மாணிக்கம், தலைமையாசிரியர் சிவசைலம், தமிழ்வேள் திருச்சபை பொன்னுசாமி, மெரிட் சுப்பிரமணியன் உட்பட சைவ வேளாளர் பேரவை மற்றும் கும்பாபிஷேக குழு செயற்குழு உறுப்பினர்கள், ஆன்மீக அன்பர்கள் கலந்து கொண்டனர்.