Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ... ராமகிருஷ்ண விஜயம் நடத்தும் சிறுகதைப் போட்டி! ராமகிருஷ்ண விஜயம் நடத்தும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழமையான தேவாலயங்களை குறி வைக்கும் கொள்ளை கும்பல்: போலீசார் திணறல்!
எழுத்தின் அளவு:
பழமையான தேவாலயங்களை குறி வைக்கும் கொள்ளை கும்பல்: போலீசார் திணறல்!

பதிவு செய்த நாள்

03 ஜூலை
2015
12:07

நாகப்பட்டினம்: நாகையில் பழமைவாய்ந்த பிரசித்திப் பெற்ற தேவாலயங்களை மர்ம கும்பல் குறி வைத்து கொள்ளையடிக்கும் செயல் தொடர்ந்தாலும், குற்றவாளிகளை நெருங்க முடியாமல் போலீசார் திணறி வருவது,சிறுபான்மை மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகை,முதலாம் கடற்கரை சாலையில் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பிரசித்திப் பெற்ற ஊசிமாதா தேவாலயம் என்ற லுõர்துமாதா தேவாலயம் உள்ளது.இத்தேவாலயம் கட்டப்பட்ட பின் தான்,கீழ்திசை நாடுகளின் லுõர்து என்றழைக்கப்படும் வேளாங்கண்ணி, ஆரோக்கியமாதா தேவாலயம் உருவாக்கப்பட்டு, வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா தேவாலயம்,நாகை ஊசிமாதா தேவாலய கட்டுப்பாட்டில் இருந்து பின் பசிலிக்கா அந்தஸ்து பெற்ற தனி நிர்வாகமாக மாறியுள்ளது.

வீரமா முனிவர் வணங்கி வாழ்த்திய வரலாற்று சரித்திரம் கொண்ட இத்தேவாலயத்தில் 90 ஆடி உயரத்தில் கண்ணாடி பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த  மாதா திருவுருவம் மற்றும் பக்கவாட்டில் அமைக்கப்பட்டிருந்த தெய்வங்களில் சுரூபங்களை,கடந்த ஆண்டு  நவ.,10 ம் தேதி.மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தினர். அதே போல் பழமையான அந்தோணியார் தேவாலயத்தில்,கடந்த 2012 ம் ஆண்டு,ஆக.,13 ம் தேதி.தேவாலயத்தின் பக்கவாட்டு ஜன்னல்களை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் தேவாலயத்தின் உள்ளே வைக்கப்பட்டிருந்த உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றனர். தொடர்ந்து கடந்த 2014 ம் ஆண்டு  நவ.,20 ம் தேதி அந்தோணியார் தேவாலயத்தின் கதவை கள்ளச்சாவி போட்டு திறந்து உள்ளே சென்ற மர்ம நபர்கள்,தேவாலயத்தில் உள்ள மாதா,குழந்தை இயேசு,அந்தோணியார்  தலையில் இருந்த வெள்ளிக் கிரீடங்கள் மற்றும் உண்டியலையும் துõக்கிக் கொண்டு சென்றுள்ளனர்.

இதே போல் வேளாங்கண்ணி அடுத்த சோழவித்தியாபுரம் சந்தனமாதா தேவாலயத்தில் கடந்த ஜூன் 21 ம் தேதி நள்ளிரவில்,தேவாலயத்தின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள்,தேவாலய பீடத்தின் கண்ணாடியை உடைத்து மாதாவின் தலையில் அணிவிக்கப்பட்டிருந்த 5 சவரன் கிரீடம்,பக்தர்களின் வழிபாட்டிற்காக கண்ணாடி பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த, 300 ஆண்டுகளாக பக்தர்கள் வழிபட்டு வந்த சந்தனமாதாவுக்கு அணிவிக்கப்பட்டிருந்த மூன்றரை சவரன் தங்கத்திலான கிரீடம் மற்றும் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.இது குறித்து பங்கு பாதிரியார் பெர்னார்ட் அளித்த புகாரின் படி,கீழையூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். தொடரும் சம்பவங்களில் சந்தேதிக்கப்படும் நபர்கள் குறித்து கிறிஸ்தவர்கள் தரப்பில் போலீசாரிடம் தெரிவித்தும் பல மாதங்களாகியும் போலீஸ் தரப்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததோடு,குற்றவாளிகளை நெருங்க முடியாமல் போலீசார் திணறுவது கத்தோலிக்க கிறிஸ்தவர்களிடையே குமுறலை ஏற்படுத்தியுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்:  திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் மாசித் தெப்ப உற்ஸவத்தை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.. சந்திரசேகரர், திவ்ய தேச ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், -  இந்தாண்டிற்கான முழு சந்திர கிரகணம் இன்று 3.20 மணிக்கு தொடங்கி மாலை 6.48 மணிக்கு முடிவடையும். ... மேலும்
 
temple news
கோவை :கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவிலில் மாசி மாச உற்சவம் நடைபெற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மாசி மகத்தை முன்னிட்டு திருமங்கை   108 திவ்ய தேசங்களில் 26-வது தலமானதும், பஞ்சரங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar