Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news எமதண்டீஸ்வரர் கோவிலில் குருப் ... சந்தனகாப்பு அலங்காரத்தில் விநாயகர் அருள்பாலிப்பு! சந்தனகாப்பு அலங்காரத்தில் விநாயகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாண்டியர் காலத்து சிவன் கோயிலில் 500 ஆண்டுக்கு முந்தைய சிவலிங்கம்!
எழுத்தின் அளவு:
பாண்டியர் காலத்து சிவன் கோயிலில் 500 ஆண்டுக்கு முந்தைய சிவலிங்கம்!

பதிவு செய்த நாள்

08 ஜூலை
2015
11:07

கீழக்கரை: உத்திரகோசமங்கை அருகே உள்ள பாண்டியர் காலத்து சிவன் கோயிலில், 500 ஆண்டுகளுக்கு முந்தைய சிவலிங்கம் உள்ளது. உத்திரகோசமங்கை அருகே உள்ள வித்தானூர் என்ற கிராமத்தில் பாண்டியர் காலத்து சிவன் கோயில் உள்ளது. கருவறை இல்லாத இக்கோயிலில் 4 அடி உயரத்தில் பீடம் உள்ளது. அதன் மீது 3 அடி உயரம், 5 அடி அகலத்தில் சிவலிங்கம் பெரிய அளவில் உள்ளது. இக்கோயிலின் முகப்பில் உள்ள ஓட்டு கட்டடத்தில் சிறிய அளவிலான நந்தி உள்ளது. அந்தஊரைச் சேர்ந்த வீரபாண்டி கூறுகையில்,""500 ஆண்டுகளுக்கு முந்தைய இக்கோயிலின் மேற்பகுதியில் கோபுரம் அமைக்கும் பணி நடந்தபோது அடிக்கடி தடங்கல் ஏற்பட்டதால், கருவறை இன்றி கோயில் திறந்த வெளியில் அமைந்துள்ளது. இது வித்வான்கள் வாழ்ந்த ஊர் என்பதால் வித்தானூர் என்று பெயர் மருவியுள்ளது.

முற்காலத்தில் ராமேஸ்வரம் வரும் யாத்திரீகர்கள், உத்திரகோசமங்கைக்கு செல்லும்போது வழியில் உள்ள வித்தானூரில் தங்கி சிவனை வழிபட்டு சென்றுள்ளனர். இக்கோயிலின் அருகில் 3 அடி அகலத்தில் உள்ள கல்வெட்டை ஆராய்ந்தால் இன்னும் பல தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளது, என்றார். கோயில் பூசாரி சுப்பிரமணியன் கூறுகையில், "" கடந்த 10 தலைமுறைகளாக இக்கோயிலை பராமரித்து வருகிறோம். சிவராத்திரி, பிரதோச காலங்களில் ராமநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகளை செய்து வருகிறோம். இங்குள்ள சிவலிங்கம் பூமிக்கடியில் சுயம்புவாக வந்திருக்கலாம் என்ற கருத்தும் இப்பகுதியில் நிலவுகிறது. திருமணத்தடைகளை போக்கும் வல்லமை கொண்டு சுவாமியாக சிவன் இங்கு விளங்குகிறார். கடந்த 2005 ல் முதன்முதலாக கிராமமக்களால் இக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது, என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
யுகாதி (உகாதி )என்றால் யுகத்தின் தொடக்கம் என்று பொருள். தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் உலக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar