Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இலஞ்சி பெருமாள் கோயிலில் இன்று ... வரசித்தி விநாயகர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குரங்கணி முத்துமாலை அம்மன் கோயிலில் ஆனிப்பெருந்திருவிழா: பக்தர்கள் குவிந்தனர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2011
11:07

ஏரல் : குரங்கணி முத்துமாலை அம்மன் கோயில் ஆனிப்பெருந்திரு விழா இன்று கோலாகலமாக நடக்கிறது. ஏரல் அருகேயுள்ள குரங்கணிமுத்துமாலை அம்மன் கோயில் தென்மாவட்டங்களில் புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றாகும். இக்கோயிலில் நடக்கும் ஆனிப்பெருந்திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும். திருவிழாவின் போது தமிழ்நாடு முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்வர். ஒவ்வொரு ஆண்டும் ஆனிமாதம் இரண்டாவது செய்வாய்கிழமை கால்நாட்டப்பட்டு நான்காவது செவ்வாய்கிழமை ஆனிப்பெருந்திருவிழா நடைபெறும். இந்தாண்டுக்கான ஆனித்திருவிழா கால்நாட்டு விழாவுடன் துவங்கியது. கால்நாட்டு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவில் நேற்று மாலை மகுட ஆட்டமும், ஆன்மிக சொற்பொழிவும், இரவு பட்டிமன்றமும் அதைத்தொடர்ந்து இன்னிசை நிகழ்ச்சியும் நடந்தது. விழாவின் முக்கிய திருவிழாவான இன்று ஆனிப்பெருந்திருவிழா கோலாகலமாக நடக்கிறது. இன்றுகாலை 10 மணிக்கு கூட்டுவழிபாடும், 11 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவு, மாலை 3 மணிக்கு பக்தி பாடல் மற்றும் 6 மணிக்கு மங்கள இசை ஆகிய நிகழ்ச்சிகளும் ,இரவு 1 மணிக்கு நாராயணசுவாமி தேவி சமேதராய் சின்ன சப்பரத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. அதைத்தொடர்ந்து இரவு நாராயணசுவாமி தேவி சமேதராய் பெரிய சப்பரத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். வரும் 19ம் தேதி பகல் 12 மணிக்கு தீர்த்தவாரி நடக்கிறது. இன்று நடக்கும் ஆனிப்பெருந்திருவிழாவில் கலந்து கொள்வதற்காக தமிழ் நாடு முழவதும் இருந்து பல்லா யிரக்கணக்கான பக்தர்கள் குரங்கணியில் குவிந்துள்ளனர். விழாவிற்கான ஏற்பாடுகளை சென்னைவாழ் குரங்கணி நாடார் சங்கம் மற்றும் கோயில் அறங்காவலர்கள், விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நிகமாந்த மகா தேசிகன் உற்சவத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி: அய்யம்பாளையம் சடையாண்டி கோவில் திருவிழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கிடா விருந்து ... மேலும்
 
temple news
அன்னூர்: அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் நேற்று இரவு தங்க தேரோட்டம் நடந்தது.அன்னூர் மன்னீஸ்வரர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar