Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விழுப்புரம் ஷீரடி சாய்பாபா சிலைக்கு ... திருவள்ளூர் தட்சிணாமூர்த்திக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா: எருமைக் கிடாக்கள் பலியிட்டு நேர்த்திக்கடன்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜூலை
2015
10:07

மணப்பாறை:மணப்பாறை அருகேயுள்ள மட்டப்பாறைப்பட்டி பத்ரகாளியம்மன் கோவிலில், ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும், திருவிழா நேற்று நடந்தது. திருவிழாவில், எருமைக் கிடாக்கள் பலியிடப்பட்டது.திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள மட்டப்பாறைப்பட்டியில், 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை, சுற்றுப்புறத்தில் உள்ள, 54 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், திருவிழா கொண்டாடுவர். இவ்விழாவில், வேண்டுதல் நிறைவேறியதற்காக, பக்தர்கள், அம்மனுக்கு பலியிட எருமை கிடாவை வழங்குவர்.கடந்த, 2009ம் ஆண்டு திருவிழா நடந்தது. ஏழு ஆண்டுகளுக்குப் பின், இந்த கோவில் திருவிழா கடந்த மாதம், 23ம் தேதி, காப்புகட்டுதலுடன் துவங்கியது. கடந்த, 7ம் தேதி கரகம்பாலித்தல் நிகழ்ச்சியும், நேற்று முன்தினம் பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும் நடந்தது.

நேற்று மதியம், கருப்பசாமி பூசாரிகளால் பத்ரகாளியம்மனுக்கு எருமை கிடாக்கள் பலியிடும் நிகழ்ச்சி நடந்தது. வேண்டுதலை நிறைவேறிய பக்தர்கள், அம்மனுக்கு காப்புக்கட்டியதில் இருந்து, நேர்த்திக்கடனாக, எருமை கிடாக்களை கோவிலில் ஒப்படைத்தனர். பக்தர்கள் நேர்த்திக் கடனாக செலுத்திய எருமைகள், கோவில் அருகில் உள்ள பட்டியில் அடைக்கப்பட்டன. பக்தர்களால் வழங்கப்பட்ட, 1,000க்கும் மேற்பட்ட எருமை கிடாக்கள், நேற்று மதியம் பலியிடப்பட்டன. விழாவில் மணப்பாறை எம்.எல்.ஏ., சந்திரசேகர், முன்னாள் எம்.எல்.ஏ., சின்னச்சாமி, அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் சேது, நகர செயலாளர் பவுன் ராமமூர்த்தி, மணப்பாறை மாரியம்மன் கோவில் அறங்காவலர் வீரமணி, ஹிந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் ஜெயா உட்பட பலர் கலந்து கொண்டனர்.எருமை கிடாக்கள் பலியிடுவதை, கேமராவிலோ, மொபைல் ஃபோனிலோ படம் எடுக்க, விழாக்குழுவினர் அனுமதிக்கவில்லை. விழாவில் திருச்சி, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். மணப்பாறை மற்றும் கரூரில் இருந்து, அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதி ... மேலும்
 
temple news
கொல்லம்: மாதா அமிர்தானந்தமயி தேவியின் 73ம் பிறந்தநாளை முன்னிட்டு, கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் முதன்முறையாக ராம் யாத்ரா நாட்டியாஞ்சலி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்திற்கு திருவாரூர் சங்கரநாராயண பீடத்தின் ... மேலும்
 
temple news
அன்னூர்; பழமையான அப்பிச்சிமார் கோவிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது.அன்னூர் அருகே, செம்மாணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar