Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பலபட்டரை மாரியம்மன் கோவிலில் ... மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்! மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாகையில் பல்லவர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு!
எழுத்தின் அளவு:
நாகையில் பல்லவர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு!

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2015
11:07

நாகப்பட்டினம்: சோழர்களின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் உருவாக்கப்பட்டிருந்த  பெரும்பாலான சிவாலயங்கள் அவர்களின் ஆட்சியிலேயே கட்டப்பட்டதாக கருதப்பட்டாலும்,சோழர்களின் முக்கிய வர்த்தக நகரமாக இருந்த நாகையில் உள்ள சிவாலயத்தில் பல்லவர் காலத்து கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கி.பி.,7 ம்நுõற்றாண்டு முதல் 9 ம் நுõற்றாண்டு வரை ஆட்சி புரிந்த பல்லவ மன்னர்கள்,கருங்கல் கோவில்களை கட்டியுள்ளனர்.பின் 10 ம் நுõற்றாண்டு முதல் அரசாண்ட சோழ மன்னர்கள் சைவ சமயத்தில் ஈடுபாடு கொண்டமையால் ஏராளமான கருங்கற்கோவில்களை கட்டி புகழ் எய்தினர்.

வரலாற்று பொக்கிஷமான கோவில்கள் நம் முன்னோருடைய சமயப் பற்றையும், பெருமையும் உலகுக்கு அறிவுறுத்தும் நினைவு சின்னங்களாக விளங்குகின்றன. கோவில்களில் நாள்தோறும் நிகழ்தற்குரிய வழிபாடுகள்,விழாக்கள்,கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள், பகலும் இரவும் இடையின்றி எரிக்கப்படும் நந்தா விளக்குகள் அதற்கு உபயதாரர், பணிபுரிபவர்கள் கடமைகள்,கோவிலுக்கு வழங்கப்பட்ட அணிகலன்கள், செப்புக் கலசங்கள், பராமரிப்புக்காக  வழங்கப்பட்ட சொத்துகள்,கோவில் கோபுரம், மண்டபம், திருச்சுற்று மாளிகை, படிமங்களின் பெயர்களை காலத்தில் அழியாத கல்வெட்டுகளாக வடிவமைத்து கோவில்களில் பொறிக்கப்பட்டன.

அக்காலத்தில் கோவில்களுக்கு திருப்பணி செய்யும் செல்வந்தர்கள்,முதலில் அரசிடம் அனுமதி பெற்று,கல்வெட்டுகள் அனைத்துயும் நகல் எடுத்து வைத்துக் கொண்டு,திருப்பணி முடிவெய்திய பின்,அரசு அதிகாரிகள் பார்த்து குறிப்பிட்ட இடங்களில் மீண்டும் கல்வெட்டை அமைக்க வேண்டும் என்பது அரசாண்ட வேந்தர்களின் ஆணை.இதனால் கோவில்களுக்கு கல்வெட்டு எவ்வளவு முக்கியமானதாக அரசர்களால் கருதப்பட்டது என்பது புரியும்.ஆனால் காலப்போக்கில் திருப்பணி செய்தவர்கள்,அரசாணையை பின்பற்றாததால் பெரும்பாலான தமிழக கோவில்களின் இன்றைய நிலை புரியும். ஒருங்கிணந்த தஞ்சாவூர் மாவட்டத்தின் கிழக்கு பகுதியாக திகழ்ந்த நாகையில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சிவாலயங்கள் அதிகம்.தமிழகத்தின் மிக பழமையான சிவாலயங்களில் ஒன்றாக கருதப்படும் நாகை,நாகநாதர் கோவில் மிக பழமையானது.பாதாளத்தை ஆட்சி புரிந்த  ஆதிசேஷன், குழந்தை வரம் வேண்டி,நாகை நாகநாதரை வழிப்பட்டதாக ஐதீகம்.இலங்கையில் சிறைவைக்கப்பட்ட சீதையை மீட்க,கடலில் பாலம் அமைக்க எண்ணி,கடற்கரையோரமாக வந்த ராமன், நாகைக்காரோணத்தில் காவிரி சங்கமத்தில் நீராடி,விசேஷ பூஜை செய்து நாகநாதரை வழிபட்டுள்ளார்.

எட்டாம் நுõற்றாண்டில் பல்லவர்களின் துறைமுகமாக விளங்கிய மாமல்லபுரம் ஆழிப்பேரலையால் அழிக்கப்பட்ட பின்,பல்லவர்களின் துறைமுகம் நாகைக்கு மாற்றம் செய்யப்பட்டதற்கு சான்றாக,ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரே பல்லவர் கால கல்வெட்டு, நாகை நாகநாதர் கோவிலில் குப்பபைகளுக்கு மத்தியில் புதைந்து கிடக்கிறது.இக்கல்வெட்டில் நாகை என்ற சொல் அறியப்படுகிறது.மேலும் பெருங்கடம்பூர் சபையோர் பொன்னும்,நெய்யும்,கோவில் நந்தா விளக்குக்கும்,நைவேத்தியத்திற்கும் கொடுத்ததை குறிக்கிறது. பழமையான  இக்கோவில் சோழர்கள் காலத்தில் கருங்கல்லான கோவிலாக மாற்றப்பட்டு திருப்பணி நடந்துள்ளது.பின் டச்சுக்காரர்கள் ஆட்சியின் போது,இக்கோவில் புனரமைக்கப்பட்டு,ராஜகோபுரம் கட்டப்பட்டு திருப்பணி நடந்துள்ளாதக, இக்கோவிலில் கல்வெட்டு உள்ளது.ஆதாரமாக திருப்பணி செய்த டச்சு அரசு அதிகாரியின் உருவம் இக்கோவிலின் ராஜகோபுரத்தின் உச்சியில்,தெய்வ சிற்பங்களுக்கு நடுநாயகமாக அமைக்கப்பட்டுள்ளது. அரசு சிறப்பு கவனம் செலுத்தி புதைந்துப் போய் கிடக்கும் கல்வெட்டை மீட்டு,தொல்பொருள் ஆராய்சி மேற்கொண்டு,வரலாற்று சான்றுகளை வருங்கால சமுதாயத்திற்கு அளிக்க வேண்டும் என்று வரலாற்று ஆர்வலர்கள் விரும்புகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுடில்லி: ‘ஒருவர் நிரந்தரமான சந்தோஷத்தில் வாழ வேண்டுமெனில், தர்ம மார்க்கத்தில் இருப்பதுதான் ஒரே ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; தருமபுரம் ஆதீனத்தில் கோலாகலமாக நடந்த மணிவிழாவின் போது குருமகா சன்னிதானம் சிவஞான கொலு ... மேலும்
 
temple news
திருப்பதி;  திருமலையில் இன்று கார்த்திகை வனபோஜன நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. உற்சவ ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; நத்தம் அய்யாபட்டியில் காளியம்மன் கருப்புசாமி கோயில் உள்ளது. இக்கோயிலின் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
மேலூர்; ராஜஸ்தானை சேர்ந்த சமண துறவிகள் முனி ஹிமான்ஷூ குமார்ஜி,முனி ஹேமந்த் குமார்ஜி. இவர்கள் உலக நன்மை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar