Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குலம் காக்கும் கோமான்! கருப்பசாமி அழைப்புப் பாடல்
முதல் பக்கம் » கருப்பசாமி புகழ் மாலை
கருப்பண்ணசாமி அருள் அந்தாதி!
எழுத்தின் அளவு:
கருப்பண்ணசாமி அருள் அந்தாதி!

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2015
15:08

1. தேரசைந்து வருவதுபோல் தெய்வம் கறுப்பணசாமி
தோளுயர்த்தி இத்திசையில் தீரனே வாருமையா
தேவரெல்லாம் போற்றும் திருக்கருணை கொண்டவனே
நாவசைத்துக் கூப்பிட்டேன் நலமதையே செய்திடையா
பூரணத்தை உன்மூலம் புரிந்து கவிபாடுகின்றேன்
காரணத்தை சாமிகிரி சித்தருக்குச் சொல்லிடையா
பேரானந்த போதையோ புண்ணியனே வாருமையா
போராடும் மனத்துயரம் வாராமல் போக்கிடையா!

2. போக்கிடையா போற்றுவோர் பெரும் பாவத்தை - உனை
பூஜிக்க இடம் மனத்தில் கொடுத்திடையா.
நோக்கிடையா நூதனமாய் செயல் புரிய
நேர்மைதனை நெஞ்சத்தில் நிறைத்திடையா
ஆக்கிடையா ஆனந்த பெருவழியை.
அவதாரக் கிருஷ்ணனைப்போல் வந்திடையா
காக்கின்ற கடவுளாக கறுப்பராயா
காவலாக இருக்க வேண்டும் காலமெல்லாம்.

3. காலத்தால் அழியாத ஞானம் தந்தாய்
காலன் அணுகாதபடி கருணை கூர்ந்தாய்
தூலத்து பிணி துயரை அழித்திடுவாய்
தூய மதியோடருளாய் வந்திடுவாய்
பாலொத்த பக்தியோடு வாழ வைப்பாய்
பாதுகாக்க கறுப்பராயா நீ இருப்பாய்
சீலத்து வழியாலே பார்த்திருப்பாய்
சிக்கலென்றால் அரிவாளை எடுத்திடுவாய்.

4. எடுத்ததை ஓங்குமுன்னே இன்னல் போகும்.
எடுப்பான மீசையது உயர்ந்து காணும்.
மடிப்பான தலைப்பாகை வஸ்திரமும்
மணிப்பிரம்பு சாட்டை பல ஆயுதமும்
கடிவாளத்துடன் வெள்ளைக் குதிரை ஏறி
காற்றோடு கலந்தவராய் வாருமையா
கறுப்பராயா  அருள்வாக்காய் கூறுமையா
கண்கலங்கும் பக்தர்களைக் காருமையா.

5. காருமையா, கண்திருஷ்டி, சிரகபாதை
கடுகோப சண்டாளத்தை போக்கிடையா
ஊரு சுற்றும் பேய் பில்லிய சூனியத்தை
உடனடியா தணுகாமல் போக்கிடையா
மாறுபட்டு பொறாமை கொண்ட மனிதரெல்லாம்
மதி திருந்தி வாழவே வேண்டுமையா
பேருபெற்ற தெய்வமே உனைத் தொழுதோம்
உறுதுணை உதவிகளைச் செய்திடையா.

6. செய்திடுவாய் சிறப்பான செயல்கள் யாவும்
செழிப்பான நல்வாழ்வாய் அமைத்திடையா
மெஞ்ஞான சித்தியதால் மேலோனாகி
மேதினியில் அமைதியினைத் தந்திடையா.
அஞ்ஞானம் அற்றவனாய் ஆக்கிடையா,
அருளான கறுப்பையா நீ இருய்யா
பேய் பிரதே ஆவி தொல்லை போக்கிடையா
பொல்லாதோர் வஞ்சகத்தை ஓட்டிடையா.

7. ஓட்டிடுவாய் பக்தருக்குத் தொல்லை வந்தால்
ஓங்கிய கை அரிவாளோடே நிற்பாய்
பாட்டிதையே பாடி நாங்கள் பக்தி கொண்டோம்.
பரவசத்தால் எங்களை நீ பார்த்திடையா
நாட்டிலுள்ளோர் நகைக்கும்படி செய்திடாதே
நம்பி விட்டோம் எங்களை நீ மறந்திடாதே.
வாட்டத்தைப் போக்கிடையா கறுப்பராயா.
வல்வினையால் அல்லல்களை கொடுத்திடாதே.

8.கொடுத்திடாதே, கெடும்புத்தி கோபந்தன்னை நல்ல
குணத்தோடு அனைவரையும் வாழ வைப்பாய்
அடுத்தவர்கள் எமைக்கெடுக்க நினைத்தபோது
அப்போது பக்கத்துணை நீ இருப்பாய்
தடத்து வழி வரும்போதும் போகும் போதும்
தடங்கலின்றி நன்மையே நடத்தி டுவாய்
கடத்துகிறேன் காலத்தை கருப்பண்ணாஉன்
காலடியில் கிடக்கின்றேன் கருணை வைப்பாய்.

9. கருணையின் திருவுருவில் அமர்ந்து நின்றாய்
கைகளிலே கதாயுதம் அரிவாள் கொண்டாய்.
பொறுமையுற்றுச் சாட்டை பிரம்பை சுற்றி
பொல்லாத பேய் பிசாசை போக்கிடுவாய்
கருமையில் செய்து வைத்த செய்வினைகள்
கறுப்பாராயா உனதருளால் அழித்திடுவாய்
கலங்காத மன திடத்தை தந்திடுவாய்
காலமெல்லாம் எங்களை நீ காத்தருள்வாய்.

10. காக்கின்ற கன்னிமார் தெய்வங்களின்
காவல் தெய்வமாகவே காட்சி தந்தாய்
சேர்க்கின்ற மகாசக்தி ஏழுபேர்க்கும்
சிறந்ததொரு காவலனாய் அமைந்திருப்பாய் -நீ
பார்க்கின்ற திசையெல்லாம் பாவம் போகும்
பக்தி கொண்டால் பலரது சாபம் நீங்கும்
போர்களத்து வீரனைப் போல் வழியில் தோன்றும்
புனிதமாய் கறுப்பராயா வருவாய் என்றும்.

11. என்றுமே கறுப்பண்ணா எனக்குள் இருப்பாய்
ஏங்கும் மனத்துயர் போக்கி இன்பமாய்
கன்று இழந்த பசுவதாய் ஆக்கிடாதே
காலமெல்லாம் காத்தருளத் தயங்கிடாதே
வென்று வரும் வீரமதை குறைத்திடாதே.
வீண் பொழுதாய் என் வாழ்வை போக்கிடாதே
சென்று வரும் மூச்சதையே நிறுத்திடாதே - என்
சீவனுக்கு துணை இருக்க மறந்திடாதே.

12. மறக்கின்ற மனநிலையோ எனக்கிருக்கும் - என்
மன்னவனே உனக்கது இருக்கலாமா
திறக்கின்றாய் அருட்கதவை தினமும் நீதான்
தியானித்த பிறகு அதை மூடலாமா
குருநாதா நீ சொன்ன கொள்கையெல்லாம்
குறைபாடு எனக்களித்து தள்ளலாமா!
குலதெய்வம் கறுப்பண்ணசாமி நீதான்
குற்றமது என் மேலே இருக்கலாமா.

13. இருக்காமல் கோபத்தை தள்ளிடையா
இனி மன அமைதியினைத் தந்திடையா
மறுக்காமல் மருத்துவத்தால் காத்திடையா
மணிமந்திர தேவனே வந்திடையா
திருக்கோலக் காட்சியினைக் காட்டிடையா
தீமைதரும் பகைவர்களை ஓட்டிடையா
கறுப்பையா என்னுடனே சேருமையா - உன்
கருணையருள் பார்வையதால் பாருமையா.

14. பாருமையா என்றுமே பணிந்து சொன்னேன்
பாவி என்ற பெயர்தனையே தந்திடாதே
யாருடைய ஆதரவு எனக்கு இங்கே
கறுப்பராயா கவலைகளைத் தந்திடாதே
ஊராரின் உண்மைகளை உணர்ந்திடவே
உத்தமனே உதவிடாது இருந்திடாதே
காரியத்தை காரணத்தை கடமைதன்னை
கவனித்து செய்திடவே மறந்திடாதே.

15, மறந்திடாதே என்றேனே மனமுருகி
மாசற்ற மனிதனாய் வாழ வைப்பாய்
உறவாகு அனைவருமே பிரிவார் ஓர்நாள்
உற்றதுணை அப்போது இருக்க வேண்டும்
தெரிந்தும் பல குற்றங்கள் செய்திருப்பேன்
தேகமென ஆசை என்று நீ மன்னிப்பாய்
புரியாமல் பேசியது பெரும் பிழையா - அந்த
பேதை நெஞ்சை எந்தனுக்கு ஏன் கொடுத்தாய்

16. கொடுத்தாயே பல திறமை என்னிடத்தில்
குறையேது நிகழாமல் செய்ய வேண்டும்
அடுத்து வரும் பொறுப்புக்கள் அத்தனையும்
ஆனந்த அருளாக நிறைய வேண்டும்
கொடுப்பதிலும், பெறுவதிலும் குணம்கெடாமல்
குலதெய்வம் கறுப்பண்ணன் கருணைவேண்டும்
நடுக்கடலில் பாய்மரம் தவிப்பதுபோல்
நலமற்ற செயல்களையே தடுக்க வேண்டும்

17. தடுத்திடுவாய் தவறுகள் எதுவானாலும்
தனிக்கருணை கொண்டவனாய் வாருமையா
சுடுகாடு இடுகாடு தன்னில் ஆடும்
சுடலைக் கறுப்பண்ணனே பாருமையா!
படும்துயரை தூரவே ஓட்டுமையா
பக்தர்களின் குறைகளையே கேட்டிடையா
கொடுவாளை எடுத்து வரும் தெய்வமையா
குணமுடனே அருள்புரிய வேண்டுமையா,

18. அருள்புரிவாய் உதிரக் கறுப்பராயா
அப்பனே உனை நம்பி வாழுகின்றோம்
ஒருவருக்கு தீங்கிழையா மனதைப் பெற்று
உண்மையான இன்பமாய் இருக்க வேண்டும்
தெருவுதனில் அலைகின்ற நாய்போல் என்றும்
தேசத்தில் சுற்றிடவே செய்திடாதே
பெருமையுடன் புகழோடும் பொருளும் சேர்ந்து
பொய் மாயைப் போக்கிடவே கிருபை செய்வாய்.

19. செய்வாயே சங்கலிக் கறுப்பராயா - உன்
சீரடியை சேவித்து நிற்கின்றோமையா
மெய்சிலிர்த்து விடுமுந்தன் மேனியது
மெதுவாகவே அசைந்து அசைந்து ஆடும்போது
கைகுவித்து வணங்குகின்றோம் பக்தியோடு உன்
கட்டழகு திருமுகத்தைக் கண்டோமையா
வையகத்து காவல் தெய்வம் நீதானையா
வருகின்ற தீவினையை நீக்கிடையா!

20. நீக்குகின்றாய் நிலையற்ற நினைவு தன்னை
நிர்குணமாய் நெஞ்சத்தை ஆக்கினாயே
ஊக்கமதைக் கொடுத்தாயே உயர்ந்தோனாக்க
உணர்வு பொங்க உள்ளத்தில் உதிக்கின்றாயே
பாக்களிலே வருகின்ற பல கருத்தை உன்
பாதத் தாமரை தன்னில் பதித்திட்டேனே
காக்கின்றேன் என்று சொல்வாய் கறுப்பராயா.
கடமைகளை நிறைவேற்ற அருள் செய்வாயா.

21. செய்வாயா என்று சொன்ன சேதி கேட்டு
செவி சாய்க்க வேண்டுமையா கறுப்பராயா
செய்தொழில் மேன்மையதாய் ஆக்கிடையா
சேவித்த பக்தருக்கும் சுகம் கொடையா
பொய் மாயை சூழ்ந்திட்ட உலகம் தன்னில்
பேரின்ப வாழ்வாக வழி காட்டையா
மேய்யுருகி மனமுருகி கருப்பையா - என்று
மெழுகுபோல் உருகி தினம் முறையிட்டோமே.

22. முறைகேட்டு குறைதீர்க்கவே வருவாயென்று
முழுமனதோடு நாங்கள் யாசிக்கின்றோம்
மறவாமல் இதைப் படித்து தியானிப்போர்க்கு
மதிமயக்கம் வந்திடாது மகிழ்ச்சி பொங்கும்
மரியாதை கொடுத்திடுவார் மாந்தர் எல்லாம்
மண்டியிட்டு எதிரிகளும் வணங்கி நிற்பார்
வெறிகொண்ட பேய் பிசாசையாவும்
விரட்டி ஓட வைப்பவனே கறுப்பராயன்.

23. கறுப்பண்ண சாமியருள் அந்தாதி இருபத்து மூன்றை
கருத்திலே நிறுத்தியே துதித்தவர்க்கு
விருப்பம்போல் திருப்பத்தால் வாழ்வமையும்
விவாக சுப மங்களங்கள் விரைவிலாகும்
கருவில் உருவான தோஷம் மறைந்து போகும்
கவலை, பிணி, நோய், திருஷ்டி கடுகியோடும்
வருவாயும் அதிகரிக்கும் பொருளும் சேரும்
வள்ளல் காவல் தெய்வமதை வணங்கிடுவோம்.

 
மேலும் கருப்பசாமி புகழ் மாலை »
temple news
மங்கலத்து நாயகனே மண்ணாளும் முதலிறைவா!பொங்குதன வயிற்றோனே பொற்புடைய ரத்தினமேசங்கரனார் தருமதலாய் ... மேலும்
 
temple news
காப்புகார்மேவு சோலையெலாம் சூழும் ஊரன்கழனியெல்லாம் கொஞ்சுதமிழ் பாடும் வீரன்பார்மேவு வடிவுடையாள் ... மேலும்
 
temple news
திருக்குளமோ பாதாளம் தொட்டு நிற்கத்திகழ்கின்ற கோபுரமோ வானம் முட்டஅருக்கனவன் ஒளிபோலக்கோடிப் ... மேலும்
 
temple news
வயலோரம் புரள்கின்ற கயல்கள் எல்லாம்வடிவுடையாள் கயல் விழியின் வடிவம் காட்டஅயல்நிற்கும் தென்னையெலாம் ... மேலும்
 
temple news
விரித்தபல் கதிர்கொள் சூலம் வெடிபடும் தமறுகங்கைதரித்ததோர் கோல கலா பைரவனாகி வேழம் உரித்துஉமை அஞ்சக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2022 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar