Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » ஸ்ரீமந் நாராயணீயம் » மோஹினி அவதாரம்
மோஹினி அவதாரம்
எழுத்தின் அளவு:
மோஹினி அவதாரம்

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2015
16:01

1. உத்கச்சத: தவ கராத் அம்ருதம் ஹரத்ஸு
தைத்யேஷு தான் அசரணான் அநுநீய தேவான்
ஸத்ய: திரோததித தேவ பவத் ப்ரபாவாத்
உத்யத் ஸ்வ யூத்ய கலஹா திதிஜா பபூவு:

பொருள்: குருவாயூரப்பனே! பாற்கடலில் இருந்து தன்வந்த்ரியாக வெளியில் தோன்றிய உன் கைகளில் இருந்த அமிர்தத்தைக் கைப்பற்றி அசுரர்கள் எடுத்துச் சென்றனர். அப்போது தேவர்கள் புகலிடம் இல்லாமல் இருந்தனர். அவர்களை நீ சமாதானப்படுத்திவிட்டு உடனே மறைந்தாய். உனது மாயையால் தேவர்களும் அசுரர்களும் சண்டையிடத் தொடங்கினர்.

2. ச்யாமாம் ருசாபி வயஸாபி தனும் ததானீம்
ப்ராப்தோ அஸி துங்க குசமண்டல பங்குராம் த்வம்
பீயூஷ கும்பகலஹம் பரிமுச்ய ஸர்வே
த்ருஷ்ணாகுலா: ப்ரதியயு: த்வத் உரோஜ கும்பே

பொருள்: குருவாயூரப்பனே! அதன் பின்னர் நீ ஒளியுடைய உருவத்துடனும், இளமையாக உள்ளதும், நீல நிறமாக உள்ளதும், பருத்த ஸ்தனங்களின் பாரத்தால் சற்றே முன்னோக்கி உள்ளதும் ஆகிய பெண் உருவத்துடன் வந்தாய் அல்லவா? உன்னை இப்படிக் கண்ட அசுரர்கள் அமிர்த கலசத்தை விட்டு விட்டு உன்னுடைய கும்பம் போன்ற ஸ்தனங்களில் ஆசை கொண்டு உன்னிடம் வந்தனர் அல்லவா?

3. கா த்வம் ம்ருகாஷி விபஜஸ்வ ஸுதாம் இமாம்
இதி ஆருட ராகவிவசாந் அபியாசத: அமூன்
விச்வஸ்யதே மயி கதம் குலடா அஸ்மி தைத்யா:
இதி ஆலபந்நபி ஸுவிச்வஸிதாந் அதாநீ:

பொருள்: குருவாயூரப்பனே! உன்னிடம் அசுரர்கள்- மானின் விழி போன்ற கண்களை உடையவளே! நீ யார்? இந்த அமிர்தத்தை நீ எங்களுக்குப் பங்கீட்டுத் தர வேண்டும் - என்றனர். உடனே நீ அவர்களிடம், நான் ஒரு நல்ல நடத்தை இல்லாதவள். என்னை எப்படி நீங்கள் நம்புகிறீர்கள்? என்று கேட்டாய். இதன் மூலம் அவர்களுக்கு உன் மீது உள்ள நம்பிக்கையை வளர்த்தாய்.

4. மோதாத் ஸுதாகலசம் ஏஷு ததத்ஸு ஸாத்வம்
துச்சேஷ்டிதம் மம ஸஹத்வம் இதி ப்ருவாணா
பங்க்தி ப்ரபேத விநிவேசித தேவ தைத்யா
லீலா விலாஸ கதிபி: ஸமதா: ஸுதாம் தாம்

பொருள்: குருவாயூரப்பனே! இதனைக் கேட்ட அசுரர்கள் மனம் மகிழ்ந்து உன்னிடம் அமிர்த கலசத்தை அளித்தனர். பெண் உருவம் கொண்ட நீ அவர்களிடம், நான் செய்வது குற்றம் என்றாலும் பொறுக்க வேண்டும் என்றாய். பின்னர் தேவர்களையும், அசுரர்களையும் தனித்தனி வரிசைகள் அமர வைத்தாய். பின்னர் உனது விளையாட்டைத் துவக்குவது போல் அமிர்தத்தை அளிக்கத் தொடங்கினாய்.

5. அஸ்மாஸு இயம் ப்ரணயினீ இதி அஸுரேஷுதேஷு
ஜோஷம் ஸ்திதேஷ்வத ஸமாப்ய ஸுதாம் ஸுரேஷு
த்வம் பக்தலோகவசக: நிஜரூபம் ஏத்ய
ஸ்வர்பானும் அர்த்த பரிபீத ஸுதம் வ்யலாவீ:

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அப்போது அசுரர்கள் உன்னைப் பற்றி என்ன நினைத்தனர்? இந்தப் பெண் நம்மிடம் மிகவும் அன்புடன் இருக்கிறாள் என்றே நினைத்தனர். அதனால் எதுவும் பேசாது அமர்ந்திருந்தனர். பக்தர்களைக் காப்பதில் குறியாக உள்ள நீ, உன்கையில் இருந்த அமிர்தம் முழுவதையும் தேவர்கள் வரிசையிலேயே முடித்து விட்டாய். (ஆனால் ராகு என்பவன் மட்டும் தேவர்கள் போல் வேடம் இட்டுக் கொண்டு அவர்கள் வரிசையில் அமர்ந்து அமிர்தம் அருந்தினான்.) இப்படியாக அமிர்தம் உண்ட ராகுவின் தலையை உனது உண்மையான உருவத்தை மீண்டும் எடுத்துக்கொண்டு, வெட்டினாய் அல்லவா?

6. த்வத்த: ஸுதாஹரண யோக்யபலம் பரேஷு தத்வா
கதே த்வயி ஸுரை: கலு தே வ்யக்ருஹ்ணந்
கோர: அத மூர்ச்சதி ரணே பலிதைத்ய மாயா
வ்யாமோஹிதே ஸுகரேண த்வம் இஹ ஆவிராஸீ:

பொருள்: குருவாயூரப்பனே! உன்னிடம் இருந்து பலவந்தமாக அமிர்த கலசத்தைப் பிடுங்கிய அசுரர்களுக்கு அவர்களுக்கான பலனை அளித்த பின்னர் (அந்தப் பலன் = அவர்களுக்கு அமிர்தம் கிட்டவில்லை) நீ மறைந்து விட்டாய். இதனால் கோபம் கொண்ட அசுரர்கள், தேவர்களுடன் சண்டையிடத் தொடங்கினர். அப்போது பலி என்னும் ஓர் அசுரனின் மிகுந்த மாயத்தன்மை வாய்ந்த யுத்தத்தால் தேவர்கள் மயங்கி விழுந்தனர். அப்போது நீ மீண்டும் வந்தாய்.

7. த்வம் காலநேமிம் அத மாலிமுகாந் ஜகந்த
சக்ரோ ஜகாந பல ஜம்ப வலாந் ஸபாகாந்
சுஷ்கார்த்ர துஷ்கரவதே நழுசௌ ச லூனே
பேதேன நாரத கிரா ந்யருணோ ரணம் த்வம்

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அதன் பிறகு நீ மாலி, காலநேமி என்ற அசுரர்களைக் கொன்றாய். பாகாஸுரன், பலி, ஜம்பன், வலன் போன்றவர்களை இந்த்ரன் கொன்றான். உலர்ந்து உள்ள பொருள் அல்லது நனைந்து உள்ள பொருள் ஆகியவற்றால் மரணம் கிடையாது என்று வரம் பெற்ற நமுசியை கடல் நுரை மூலம் கொன்றனர். அப்போது நீ நாரதனின் சொற்கள் மூலமாக போரை நிறுத்தினாய்.

8. யோஷா வபு: தனுஜ மோஹனம் ஆஹிதம் தே
ச்ருத்வா விலோகன குதூஹலவான் மஹேச:
பூதை: ஸமம் கிரிஜயா ச கத: பதம் தே
ஸதுத்வா அப்ரவீத் அபிமதம் த்வம் அதோ திரோதா:

பொருள்: குருவாயூரப்பனே! அசுரர்களை மயக்குவதற்காக நீ பெண் வேடம் தரித்தாய் என்று கேள்விப்பட்ட சிவன் அந்த வடிவத்தில் உன்னைக் காண ஆவல் கொண்டார். தனது பூதகணங்களை மற்றும் பார்வதியோடு உன்னுடைய இருப்பிடமான வைகுண்டத்தை அடைந்தார். உன்னை ஸ்தோத்திரம் செய்து தனது விருப்பத்தைக் கூறினார். உடனே நீ மறைந்து விட்டாய்.

9. ஆராமஸீமநி ச கந்துக காதலீலா
லோலாயமாந நயநாம் கமநீம் மநோஜ்ஞாம்
த்வாம் ஏவ வீக்ஷ்ய விகலத் விஸநாம் மநோபூ
வேகாத் அநங்கரிபு: அங்க ஸமாலி லிங்க

பொருள்: குருவாயூரப்பா! வைகுண்டத்தில் உள்ள தோட்டத்தில் ஒரு மூலையில் நீ பெண் உருவம் எடுத்து பந்து விளையடினாய். அந்த விளையாட்டினால் களைப்புற்ற கண்கள் அலை மோத, அழகிய பெண்ணாக இருந்த உனது மேலாடை காற்றினால் நழுவி விழுந்தது. இதனை பார்த்த, மன்மதனையே எரித்த சிவன், உன் மீது விருப்பம் கொண்டு உன்னைத் தழுவினார் அல்லவா?

10. பூயோபி வித்ருதவீதம் உபதாவ்ய தேவோ
வீர்ய ப்ரமோக்ஷ விகஸத் பரமார்த்த போத:
த்வந்மானித: தவ மஹத்வம் உவாச தேவ்யை
தத்தாத்ருச: த்வம் அவ வரத நிகேத நாத

பொருள்: வரமளிப்பவனே! குருவாயூரப்பனே! ஸ்ரீ பரமசிவனின் பிடியில் இருந்து விலகி ஓடினாய். உன்னைத் தொடர்ந்த சிவன் தனது வீர்யத்தை வழியெங்கும்-சிதறவிட்டார். உடனே மனத்தெளிவு அடைந்தார். உனது மகிமையை பார்வதிக்கு உரைத்தார். நீயும் அவரை மிகவும் மதித்துப் பாராட்டினாய். இத்தனை பெருமைகளை உடைய நீ என்னைக் காப்பற்ற வேண்டும்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2022 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar