சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த மிராளூர் ஆலடி ஐய்யனார் கோவிலில் மண்டலாபிஷேகம் நடந்தது. சேத்தியாத்தோப்பு அடுத்த மிராளூர் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட பூர்கலா, புஷ்கலா சமேத ஸ்ரீ ஆலடி ஐய்யனார் கோவில் கும்பாபிஷேகம் கடந்த மே மாதம் 29ம் தேதி நடந்தது. கும்பாபிஷேகம் முடிந்து 48 நாட்கள் மண்டல பூஜை செய்து வந்த நிலையில், நேற்று முன்தினம் (20ம் தேதி) உபாசாதகர் கலாநிதி, பின்ன லுõர் சிவஸ்ரீ குருமூர்த்தி சிவாச்சாரியார் ஆகிய குருக்கள் தலைமையில் ஆலடி ஐய்யனார் சாமிக்கு மண்டல அபிஷேகம் நடந்தது. நிகழ்ச்சியில் ÷ காவில் நிர்வாக செயலர் வரதராஜி தலைமையில் சிகாமணி, ராஜா, ரவி, கந்தசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.