Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடைமடையில் களையிழந்த ஆடிப்பெருக்கு! கொள்ளிடம் ஆற்றில் ஆடிப்பெருக்கு விழா! கொள்ளிடம் ஆற்றில் ஆடிப்பெருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொம்பு ஊதி ‘ஆடிவேட்டை’ நடத்தும் கம்பளத்து நாயக்கர்கள்!
எழுத்தின் அளவு:
கொம்பு ஊதி ‘ஆடிவேட்டை’ நடத்தும் கம்பளத்து நாயக்கர்கள்!

பதிவு செய்த நாள்

04 ஆக
2015
11:08

திண்டுக்கல்:  ஆடிபெருக்கை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கம்பளத்து நாயக்கர்கள் பாரம்பரியம் மாறாமல் கொம்பு ஊதி ஆடிவேட்டை சடங்கு  நடத்தினர். திண்டுக்கல், பழநி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், குஜிலியம்பாறை மலை அடிவாரப் பகுதிகளில் கம்பளத்து நாயக்கர்கள் அதிகளவில்  வசிக்கின்றனர்.  இவர்கள் ஆடிபெருக்கை முன்னிட்டு வேட்டை நடத்துவதை பராம்பரிய வழக்கமாக கொண்டுள்ளனர். வனத்துறையினர் கெடுபி டியால் இந்த நிகழ்வை தற்போது சடங்காக நடத்துகின்றனர். நேற்று ஆடிபெருக்கை முன்னிட்டு வேடசந்தூர் பகுதி கிராமங்களில் பெரியோர்கள்  மந்தை கோயில் முன் நின்று கொம்பு ஊதி மக்களை அழைத்தனர். இதில் வேட்டைக்கு பயன்படும்  நாய், குத்தீட்டி, வேல்கம்பு, கோடாரியுடன்  குடும்பத்திற்கு ஒருவர் பங்கேற்றனர். தலைமை வகிப்பவர் தெய்வத்தை வழிபட்டு வேட்டையை துவக்குகிறார். அவர் கூறிய திசையில் கூச்சலிட்டு  கொண்டே ஊர் தெருக்களில் ஊர்வலமாக செல்கின்றனர். முடிவில் கம்பளியில் வெற்றிலை பாக்கு வைத்து சுருட்டி நீண்ட கம்பில் கட்டுகின்றனர்.  அவற்றை விலங்குகளை கட்டி தூக்கி வருவதைபோல் ஆரவாரத்துடன் மந்தை கோயிலுக்கு எடுத்து செல்கின்றனர். பின் தப்பு, உருமியின் இசைக்÷ கற்ப அனைவரும் ஓகோ... ஓகோ... என்று ஒலி எழுப்பி, கைகளை வீசி, பதுங்கி பாய்ந்து வேட்டை ஆடுவதை போல் பாவனை காட்டி  நடனமாடுகின்றனர்.  சிலர் புலி, கரடி, குரங்கு போல் வேடமிட்டும் ஆடுகின்றனர். பின் பெண்கள் மங்களப்பாட்டு பாடி வேட்டையாட சென்றோரு க்கு ஆரத்தி எடுக்கின்றனர். இந்த சடங்கு முடிந்தவுடன் மாமன், மைத்துனர்களுக்கு புதுவேட்டி, துண்டு வழங்கி மரியாதை செய்கின்றனர்.  விரு தலைப்பட்டி பொம்மையா கூறியதாவது: ஆடி பதினெட்டில் முன்னோர்கள் வழியில் ஆடிவேட்டை சடங்கு நடத்துகிறோம். இவற்றை செய்ய õவிட்டால் அந்த ஆண்டு முழுவதும் சிறப்பாக இருக்காது. நாங்கள் எந்த விலங்குகளையும் துன்புறுத்துவதும், கொல்வதும் இல்லை, என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; பெரியநாயக்கன்பாளையம் குப்பிச்சிபாளையம்ரோட்டில் இருக்கும் பால தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ... மேலும்
 
temple news
குரோதி ஆண்டு சித்திரை 18 (மே1, 2024) மாலை 5:21 மணிக்கு மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு குருபகவான் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் தலத்தெரு தங்க மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் பூமாயிஅம்மன் கோயிலில் நேற்று கொடியேற்றத்துடன் வசந்தப் பெருவிழா ... மேலும்
 
temple news
செந்துறை, செந்துரை அருகே சேத்தூர் செல்வமுத்து மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar