Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மூலஸ்தம்மன் கோவிலில் ஆடி திருவிழா! ஏகாத்தம்மன் கோவிலில் தீமிதி திருவிழா! ஏகாத்தம்மன் கோவிலில் தீமிதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாமல்லபுரம் ஆளவந்தார் குரு பூஜை!
எழுத்தின் அளவு:
மாமல்லபுரம் ஆளவந்தார் குரு பூஜை!

பதிவு செய்த நாள்

04 ஆக
2015
12:08

மாமல்லபுரம்: நெம்மேலியில், ஆளவந்தார் குரு பூஜை விழா நடந்தது. இந்து சமய அறநிலைய துறையின் கீழ், மல்லபுரத்தில், நெம்மேலி ஆளவந்தார் நாயகர் அறக்கட்டளை இயங்கி வருகிறது. மாமல்லபுரம் அடுத்த, நெம்மேலியைச் சேர்ந்த ஆளவந்தார், ஆங்கிலேயர் ஆட்சியின்போது, கடலோர பகுதியில் சவுக்கு வளர்த்து, அரசுக்கு உதவினார். இதையடுத்து, அப்போதைய அரசு, அவர் சவுக்கு வளர்த்த பகுதிகளை, அவருக்கே இலவசமாக வழங்கி கவுரவித்தது. அவர், ஆன்மிகத்தை நாடி, பல நுாறு ஏக்கர் நிலத்தை, தமிழக அரசிடம் ஒப்படைத்து, அதன் வருவாயில், கோவில் உற்சவங்கள் மற்றும் தர்ம செயலுக்கும் பயன்படுத்த உயில் பதிவு செய்தார். அரசும், அறநிலைய துறை அறக்கட்டளை ஏற்படுத்தி, சொத்துகளை பராமரித்து வருகிறது. நெம்மேலியில், அவரது நினைவிடத்தில், அவர் பிறந்த பூரட்டாதி நட்சத்திர நாளில், ஆண்டுதோறும் குரு பூஜை விழாவும் நடத்தப்பட்டு வருகிறது. இவ்விழா, நேற்று முன்தினம் திருவாய்மொழி சேவையுடன் துவங்கியது. அதை தொடர்ந்து, நேற்று, காலை 7:00 மணிக்கு, அவருக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்து, 9:00 மணிக்கு, மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள், திருவிடந்தை, நித்ய கல்யாண பெருமாள் ஆகிய சுவாமிகளின் சார்பில், அவருக்கு பரிவட்ட மரியாதை அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, 10:00 மணிக்கு, பாகவதர்கள் திருவாய்மொழி சேவையாற்றினர். செயல் அலுவலர்கள் ஜெயச்சந்திரன், வேதமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அவிநாசி: அவிநாசி ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், வியாஸராஜர் ராம நாம பஜனை மடத்தில் கம்பராமாயணம் தொடர் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னிதி தெரு, 16 கால் மண்டபம் அருகில் கார், வேன், பேருந்து உள்ளிட்ட ... மேலும்
 
temple news
திருப்பூர்: திருப்பூர், ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில், ஆண்டு தோறும், வைகுண்ட ஏகாதசி விழா விமரிசையாக ... மேலும்
 
temple news
காரைக்குடி: காரைக்குடி அருகே உள்ள அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஐயப்பன் கோயில்களில் மண்டல பூஜை நடந்தது.கோபால்பட்டி அருகே ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar