Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புதுச்சேரி சொர்ணபைரவர் கோவிலில் ... மதுரை திருப்பரங்குன்றத்தில் மச்சமுனி சித்தர் ஜெயந்தி விழா! மதுரை திருப்பரங்குன்றத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவாடானை ஆடிப்பூர விழா கொடியேற்றம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவாடானை ஆடிப்பூர விழா கொடியேற்றம்!

பதிவு செய்த நாள்

08 ஆக
2015
11:08

திருவாடானை: திருவாடானையில் உள்ள பிரசித்தி பெற்ற ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூரத்திருவிழா நேற்று காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. சிநேகவல்லி தாயாருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, தீபாராதனைகள் நடந்தது. இரவில் சிநேகவல்லி தாயார் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் செயல் அலுவலர் சந்திரசேகர், 22 கிராமங்களை சேர்ந்த நாட்டார்கள், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஆக.,15, திருக்கல்யாணம் ஆக.,18 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

பரமக்குடி:
பரமக்குடி அருகேயுள்ள ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட நயினார்கோவில் சவுந்தர்யநாயகி சமேத நாகநாதசுவாமி கோயில் ஆடிப்பூர திருவிழா, நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு வாஸ்து சாந்தியுடன் துவங்கியது. நேற்று காலை 7.35 மணிக்கு அம்மன் சன்னதி முன் உள்ள கொடி மரத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கொடியேற்றினர்.

 இதையொட்டி தினமும் காலை, இரவு அம்மன் வெள்ளி பல்லக்கு, அன்னம், சிம்மம், கமலம், ரிஷபம், கிளி, குதிரை, காமதேனு ஆகிய வாகனங்களில் வீதியுலா வருவார். ஆக., 15 ல் காலை 10.30 மணிக்கு தேரோட்டமும், ஆக., 18 ல் காலை 10.30 முதல் 11.15 மணிக்குள் நாகநாதசுவாமி,சவுந்தர்யநாயகி அம்மன் திருக்கல்யாணம் நடைபெறும்.

இரவு மின்சார தீப அலங்கார ரதத்தில் சுவாமியும், தென்னங்குருத்து சப்பரத்தில் அம்மன் வீதியுலா வருவர். ஆக., 21 ல் இரவு கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைகிறது. ஆக., 27 ல் உற்சவ சாந்தி நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: சூளாங்குறிச்சி வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையையொட்டி ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: அட்டுக்கல்லில் உள்ள கருப்பராயன் கோயிலில், சுவாமி அழைத்தல் நேற்று நடந்தது.அட்டுக்கல், ... மேலும்
 
temple news
பல்லடம்: பல்லடம் மாகாளியம்மன் கோவிலில், கர்ப்ப கிரகத்துக்கு, மண்‌ இடுதல் நிகழ்ச்சி இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar