Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பத்தமடை கோயிலில் 25ம் தேதி ... காஞ்சிக்கோவில் சீதேவியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர் கோவில் திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2011
11:07

ஸ்ரீவைகுண்டம் : ஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர் கோவில் திருத்தல திருவிழா கொடி யேற்றத்துடன் துவங்கியது. இயேசுவின் 12 சீடர்களில் ஒருவரான புனித சந்தியாகப்பருக்கு ஸ்ரீவை குண்டம் தாமிரபரணி நதிக் கரையில் 400 ஆண்டுகளுக்கு முன்பு கோயில் கட்டப்பட்டு இதன் திருத்தல திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 16ம்தேதி முதல் 25ம்தேதி வரை நடக்கிறது. குருஸ் கோவில் என்றழைக்கப்படும் புனித சந்தியாகப்பர் கோவிலில் நேற்று முன்தினம் மாலை கொடிகள் அர்ச்சிக்கப் பட்டு ஸ்ரீவைகுண்டம் நகர் முழுவதும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. பின்னர் கோவிலை சுற்றி வந்து சாத்தான்குளம் மறை மாவட்ட முதன்மை குரு எட்வர்ட் தலைமையில் கொடியேற்றப்பட்டது. இரவு கொம்புத்துறை பங்கு தந்தை விக்டர்லோயோ தலைமை யில் மறையுரையும், நற் கருணை ஆராதனையும் நடந்தது. திருவிழா நாட்களில் தினமும் காலை 5.30 மணிக்கு திருப்பலியும் மாலை 6.30 மணிக்கு திருயாத்திரை திருப்பலியும் நற்கருணை ஆராதனையும் நடக்கிறது. வரும் 24ம்தேதி 9ம்திருவிழா அன்று தூத்துக்குடி இளை யோர் பணியகம் உதவி இயக்குனர் பங்குத்தந்தை கிராசியுஸ் மைக்கில், தலைமையில் காலை 6.30 மணிக்கு திருப்பலியும் நடக்கிறது. காலை 9.30 மணிக்கு மாதா, புனித சந்தியாகப்பர், மிக்கேல்தூதர் ஆகியோர் சப்பரபவனி நடக்கிறது. பங்கு தந்தை லூசன் தலைமையில் 12 மணிக்கு ஜெபமாலை திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு மணப்பாடு மறை மாவட்ட முதன்மை குரு செல்வராஜ் தலைமையில் நற்கருணை பவனியும், தூத்துக்குடி புனித அந்தோணியார் பங்குத்தந்தை ஸ்டார்வின் தலைமையில் நற்கருணை ஆராதனையும் நடக்கிறது. வரும் 25ம்தேதி 10ம் திருவிழாவையொட்டி காலை 4.30 மணிக்கு முதல் திருப்பலியும், 5.15 மணிக்கு இரண்டாவது திருப்பலியும், காலை 6 மணிக்கு மூன்றாம் திருப்பலியும், காலை 7 மணிக்கு நான்காம் கூட்டுத் திருப்பலியும், பகல் 10 மணிக்கு தேர்பவனியும், பகல் 12 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் ஆண்டகை தலைமையில் திருவிழா திருப்பலி நடக் கிறது. வரும் 26ம்தேதி காலை 6மணிக்கு திருப்பலியும், கொடியிறக்கமும் நடக்கிறது. திருவிழா நாட்களில் பங்கு தந்தைகள் ஜாண்பென்சன், மகிழன், ரெமிஜியுஸ், ஆரோக்கியராஜ், ஆரோக்கிய தாஸ், கி÷ஷார், சேவியர் அந்தோணி ஆகியோர் தலைமையில் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீவைகுண்டம் பங்குதந்தை ஜெயகர், அருள் சகோதரிகள், பங்குப்பேரவை, ஊர்நலக் கமிட்டி ஆகியோர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திட்டக்குடி: மாசி மாத கடைசி சனிக்கிழமையொட்டி, பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் கோ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 58வது ஜெயந்தி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெப்பக்குளத்தில், தெப்பத்தேர் வைபவம் நடந்தது.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம், நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்பெருமாள் கோவிலில், தங்கத் தேர் செய்வதற்கான முதல் தவணை காசோலையை கும்பகோணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar