Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராஜசோளீஸ்வரி கோவிலில் அபிராமி ... மதுரையில் சிவனின் திருவிளையாடல் ஆரம்பம்! மதுரையில் சிவனின் திருவிளையாடல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இன்று.. நோய் நொடி நீங்கி ஆரோக்கியம் தரும் நாக சதுர்த்தி!
எழுத்தின் அளவு:
இன்று.. நோய் நொடி நீங்கி ஆரோக்கியம் தரும் நாக சதுர்த்தி!

பதிவு செய்த நாள்

18 ஆக
2015
01:08

அம்மன் வழிபாட்டில் புற்று வழிபாட்டிற்கு சிறப்பிடம் உண்டு. மாரியம்மன் பாம்பு வடிவில் காட்சியளிப்பதாக ஐதீகம் உண்டு. பாம்பு புற்றை ‘புற்று மாரியம்மன்’ என்ற பெயரிலும் வழிபடுவர். ஆடி வளர்பிறை சதுர்த்தியான நாக சதுர்த்தியும், வளர்பிறை பஞ்சமியான நாகபஞ்சமியும் புற்று வழிபாட்டுக்கு உகந்த நாட்கள். இந்நாட்களில் புற்றுக்கு முன் பொங்கலிட்டும், பால் வைத்தும் வழிபாடு நடத்துவர். இதன் மூலம் நோய் நொடி நீங்கி ஆரோக்கியம் பெருகும் என்பர். பாம்பை அம்பிகையின் ஆபரணமாகவும், குடையாகவும் சொல்வதோடு, நாகாத்தம்மன் என்ற பெயரில் வழிபடுவோரும் உண்டு. இவ்வாண்டு ஆடி மாத முடிவில், ஆவணி துவக்கத்தில் வளர்பிறை சதுர்த்தி வருவதால் இன்று நாக சதுர்த்தியாக அனுஷ்டிக்கப்படுகிறது.

நாகத்தை சிவன் அணிந்தது ஏன்?
: சிவன் தனது தலை, கழுத்து, கைகளில் பாம்பை ஆபரணமாக அணிந்துள்ளார். இதற்கு விசேஷ காரணம் உள்ளது. மனிதனுக்கு கண், காது, மூக்கு, வாய், மெய் என்னும் ஐம்புலன்உள்ளன. இவை தீயவழிகளில் ஈடுபடும் போது, விஷம் கக்கும் நாகம் போல துன்பத்திற்கு மனிதன் ஆளாக நேரிடும். இவற்றை அடக்கி நல்வழியில் செலுத்தி விட்டால் வாழ்விற்கு அழகூட்டும் ஆபரணமாக மாறி விடும். இதை நமக்கு உணர்த்தவே சிவன் நாகத்தை ஆபரணமாக அணிந்துள்ளார். இதை வெளிப்படுத்தும் விதமாகவே தங்கம், வெள்ளி, பித்தளையால் ஆன நாகத்தை சிவலிங்கத்தின் தலையில் ஆபரணமாக சாத்துவர். நாக லிங்கத்தை தரிசித்தால் தீய ஆசை, மனக்குழப்பம் நீங்கி வாழ்வில் நிம்மதி  உண்டாகும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மண்டூகம் என்ற சொல்லின் பொருள் "தவளை. ஒரு சாபத்தின் காரணமாக மகரிஷி ஒருவர் தவளையாக மாறி விட்டார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு, பவுர்ணமி கருட சேவை மிகுந்த பிரம்மாண்டத்துடன் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்:வெள்ளியங்கிரி மலையில், சித்ரா பவுர்ணமி தினமான பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: மலைக்கோட்டையில் பத்மகிரீஸ்வரர் அபிராமி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 275 ... மேலும்
 
temple news
மேலுார்: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உப கோயிலான திருவாதவூரில் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோயிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar