Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேவகோட்டை கருப்பண்ணசாமி கோயில் ... அமர்நாத் யாத்திரையை துவக்கியது ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாமக்கல் ஷீரடி சாய்பாபா கோவில் கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
நாமக்கல் ஷீரடி சாய்பாபா கோவில் கும்பாபிஷேக விழா

பதிவு செய்த நாள்

21 ஆக
2015
11:08

நாமக்கல்: தொட்டிப்பட்டி சாய் தபோவனத்தில், ஷீரடி சாய்பாபா கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. அதில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர். நாமக்கல்-பரமத்தி சாலை, தொட்டிப்பட்டியில் சாய் தபோவனத்தில், ஷீரடி சாய்பாபா கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, மிகுந்த பொருட்செலவில் கோவில் திருப்பணி துவங்கியது. திருப்பணிகள் அனைத்தும் முடிவடைந்ததை தொடர்ந்து, நேற்று கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. கரூர் சின்மயா மிஷன் ஆச்சார்யா அநுத்தமாநந்தா ஸ்வாமிகள், நாமக்கல் ராமகிருஷ்ண ஆஸ்ரமத்தின் தலைவர் பூரணசேவாநந்த மஹராஜ் ஸ்வாமி ஆகியோர் முன்னிலையில் சிறப்பாக நடந்தது. விழாவை முன்னிட்டு, குரு பிரார்த்தனை, கணபதி பூஜை, மகா யாகம், அக்னி உருவெடுத்தல், புண்யாகம், மூர்த்தம் ஆவாகணம், ஜபம், பூர்ணாஹூதி ஹோமம், நித்ய ஆராதனை நடக்கிறது. மாலை, 4 மணிக்கு, இரண்டாம் கால பூஜை நடந்தது. மேலும், நித்திய ஹோமம், மகா சாந்தி ஹோமம், நித்ய ஆராதனையும், மகா சாந்தி அபிஷேகம், விமான நேத்திரம் திறத்தல், மூர்த்தம் நேத்ரம் திறத்தல், தீபாராதனையும் நடந்தது. நேற்று, அதிகாலை, 5.45 மணிக்கு, ஐந்தாம் கால பூஜையும், கும்பம் புறப்படுதல் நிகழ்ச்சியும் நடந்தது. அதையடுத்து, காலை, 9 மணிக்கு, கற்பக விநாயகர், யோக ஆஞ்சநேயர் மற்றும் சர்வசித்தி சாயி ஸ்வாமி திருக்கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது. விழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, விழாக்குழுவினர், ஷீரடி சாய்பாபா வழிபாட்டு மன்றத்தினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில் அண்ணாமலையாருக்கு சூலம் ரூபத்தில் தீர்த்தவாரி, சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முத்தான நிகழ்வாக, தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர், வைகை ஆற்றில் ... மேலும்
 
temple news
மதுரை: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக மதுரை மாநகருக்குள், கண்டாங்கி பட்டுடுத்தி தங்க ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சாரங்கபாணி சுவாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar