Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்போரூர் விநாயகர் சிலைகள் ... மயிலம் முருகன் கோவிலில் கிருத்திகை விழா! மயிலம் முருகன் கோவிலில் கிருத்திகை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிருஷ்ண ஜெயந்தி விழா!
எழுத்தின் அளவு:
கிருஷ்ண ஜெயந்தி விழா!

பதிவு செய்த நாள்

05 செப்
2015
11:09

குருவாயூரப்பன் மீது நாராயண பட்டத்திரி பாடிய ஸ்தோத்திரம் நாராயணீயம். இதை கிருஷ்ண ஜெயந்தியான 5.9.15-ல் படிப்பதன் மூலம் நினைத்தது நடக்கும்.

*மஹா விஷ்ணுவே! கிருஷ்ணா! வேதங்களால் போற்றப்படுபவனே! ஆனந்த வடிவானவனே! கோபியரின் மனத்தில் இருப்பவனே! என் துன்பம் நீங்க வணங்குகிறேன்.

*மும்மூர்த்திகளில் சிறந்தவனே! சர்வேஸ்வரனே! கருமை நிறக் கண்ணா! மந்திர சாஸ்திரங்களில் எங்கும் நிறைந்திருப்பவன் நீயே என்று கூறப்பட்டுள்ளது. உன்னை ஆதிசங்கரரும் போற்றி வணங்கிஉள்ளார். அந்த திருப்பாதங்களைப் போற்றுகிறேன்.

*தேவாதி தேவனே! அனைவருக்கும் உயிராக விளங்கும் கிருஷ்ணனே! உண்மையில்லாதவற்றில் ஆசை கொண்டு துன்பம் அடையும் மனிதன், உன்னை வணங்கினால் எல்லா இன்பமும் அடைவான். அவ்வாறு அருள் செய்ய வேண்டுமென உன்னை வணங்குகிறேன்.

*எங்கும் நிறைந்த பரம்பொருளே! உடல், மனம், மொழியால் இந்த பூமியில் எதையெல்லாம்
செய்கிறேனோ அனைத்தையும் உன்னிடம் சமர்ப்பிக்கிறேன். உன் திருவடியில் சரணடைகிறேன்.

*உன்னிடம் சரணடைந்தவர்கள் எல்லா செயல்களிலும் வெற்றி பெறுவர். தேவாதி தேவனே! அப்படிப்பட்ட நல்லவர்களின் தொடர்பு எப்போதும் கிடைக்கட்டும். அவர்களுடைய நல்ல வார்த்தையால் பாவம் நீங்கி பக்தி பெருகட்டும்.

*ஜகந்நாதப் பெருமாளே! ஹரியே! பஞ்சபூதம், பிர பஞ்சம், பறவை, மீன், விலங்கு, தாவரம் என எல்லாவற்றையும், நண்பர், எதிரியையும் கூட, உன்னுடைய வடிவமாகவே கண்டு மகிழ்கிறேன். இவ்விதம் வழிபடுவதால் பக்தியும், ஞானமும் வாய்க்கும் பேறு பெற்றேன்.

*பெருமானே! உன்னிடத்தில் மனம் ஒன்றி விட்டதால், வழக்கமான பசி, தாகம் மறந்து விட்டது. கண நேரமும் உன்னை மறவாமல் செயல்களில் ஈடுபாடு கொண்டுள்ளேன். மனதில் சிறிதும் தளர்ச்சி இப்போது இல்லை. உன் அருளால், மகிழ்ச்சியோடு எங்கும் உலாவுகிறேன்.

*பெருமாளே! கலியுகத்தில் உன் பெயரைச் சொன்னாலும், உன்னைப் பற்றிப் பாடினாலும் கூட போதும்! உன் அருளைப் பெற்று விடலாம். இப்படி ஒரு வாய்ப்பு இருப்பதால் எல்லாரும் இந்த யுகத்தில் பிறக்க ஆசைப்படுகின்றனர். பாக்கிய வசத்தால் இந்த கலியுகத்தில் பிறந்த என்னை ஏற்றுக் கொள்வாய்!

*வாசுதேவா புருஷோத்தமா! கங்கையில் நீராடுதல், கீதை வாசித்தல், காயத்ரி மந்திரம் சொல்லுதல், துளசி அணிவித்தல், கோபி சந்தனம் அணிதல், சாளக்கிராம பூஜை, ஏகாதசி விரதம், ஓம் நமோ நாராயணாய என்ற மந்திரம் இவை எட்டும் உன் அருளுக்கு வழிவகுக்கும். இந்த எட்டு வழிகளிலும் என்னை ஈடுபடுத்தி நல்லருள் புரிய வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி மகா சிவராத்திரியாக வழிபட படுகிறது. பார்வதி தேவி இரவு முழுவதும் ... மேலும்
 
temple news
கடலுார் ; கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் மகா சனிப்பிரதோஷத்தை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாசி பிரம்மோத்சவம் வரும் 21ம் தேதி காலை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயிலான அங்காள பரமேஸ்வரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar