Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆர்ஜித சேவா டிக்கெட்டுக்கள் ரத்து: ... தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா 26ல் கொடியேற்றத்துடன் துவக்கம் தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை நடை அடைப்பு: மீண்டும் ஆகஸ்ட் 4ம் தேதி திறப்பு
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2011
11:07

சபரிமலை : ஆடி மாத பூஜைகள் மற்றும் சிறப்பு பூஜைகள் முடிவடைந்து, சபரிமலை அய்யப்பன் கோவில் நடை, இன்று இரவு அடைக்கப்படும். நிறப்புத்தரி உற்சவத்திற்காக நடை ஆகஸ்ட் 4ம் தேதி மாலை திறக்கப்பட்டு, அதற்கடுத்தநாள் உற்சவம் முடிந்து அன்றிரவே நடை அடைக்கப்படும். கேரளாவில் பிரசித்திப் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில், ஒவ்வொரு தமிழ், மலையாள மாதப்பிறப்பன்று நடை திறக்கப்பட்டு, மாத மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல், ஆடி மாத பூஜைகளுக்காக கடந்த 16ம் தேதி மாலை 5.30 மணிக்கு, தந்திரி கண்டரரு ராஜீவரரு முன்னிலையில், மேல் சாந்தி சசி நம்பூதிரி நடை திறந்தார். மறுநாள் அதிகாலை கணபதி ஹோமத்துடன் வழக்கமான பூஜைகள் துவங்கின. மேலும், சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகங்களான படி, உதயாஸ்தமனம், புஷ்பாபிஷேகம், சகஸ்ர கலசாபிஷேகம், சந்தன அபிஷேகம் ஆகியவையும் நடந்தது. சபரிமலை பகுதியில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், நடை திறந்த நாள் முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையில் குவிந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மாத மற்றும் சிறப்பு பூஜைகள் நிறைவுற்று, இன்றிரவு 10 மணிக்கு ஹரிவராசனம் பாடல் பாடி நடை அடைக்கப்படும். இதனை தொடர்ந்து ஆகஸ்ட் 4ம் தேதி நிறபுத்தரி உற்சவத்திற்காக நடை திறக்கப்படும். மறுநாள் (5ம் தேதி) அதிகாலை 5.30 மணிக்கு, விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் சாகுபடி செய்த, புத்தம் புதிய நெற்கதிர்களை கொண்டு சுவாமிக்கு படைப்பர். இந்நிகழ்ச்சி காலை 6.30 மணி வரை நடைபெறும். தொடர்ந்து வழக்கம்போல் பூஜைகள் செய்விக்கப்படும். உற்சவம் முடிந்து, அன்றிரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழாவில் அம்மன் மஞ்சள் நீராட்டத்துடன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
காளஹஸ்தி;  திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு மகா சம்ஸ்தானம் சிருங்கேரி பீடாதிபதி ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் வடகரை பகவதியம்மன் கோயில் மாசித்திருவிழா நிறைவு நாளை முன்னிட்டு‌ ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar