கோவில்பட்டி ஐயப்பன் கோயிலில் ஒரு லட்சம் தேங்காய் உடைப்பு!
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜூலை 2011 11:07
கோவில்பட்டி : கோவில்பட்டி ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜையை முன்னிட்டு ஒருலட்சத்து 8 தேங்காய் உடைத்த விடலை திருவிழா நடந்தது. கோவில்பட்டி ஐயப்பன் கோயிலில் 41வது நாள் மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. விழாவை முன்னிட்டு முதல்நாளன்று ஐயப்பன் திருவுருவ படத்துடன் கோவில்பட்டி நகரின் முக்கிய வீதிகள் வழியாக 1 லட்சத்து 8 தேங்காய்கள் கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து காலை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஒரு லட்சத்து 8 தேங்காய் உடைக்கும் விடலை திருவிழா துவங்கியது. இதில் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேங்காய் வாங்கி உடைத்தனர். அதைத்தொடர்ந்து சிறப்பு பூஜையும், அன்னதானமும் நடந்தது. இதையடுத்து இரவு படிபூஜை நடந்தது. விழாவில் சந்திரசேகரன், விக்னேஷ், காளிராஜன், சுப்புராஜ், தேன்ராஜா, கோயில் தலைவர் சிங்கமாடசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.