விஸ்வநாதர் கோயில் பாதை வசதியில்லாததால் பக்தர்கள் பாதிப்பு!
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜூலை 2011 12:07
போடி: போடி காசிவிஸ்வநாதர் கோயிலுக்கு செல்லும் பாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் பவுர்ணமி, பிரதோஷம் போன்ற நாட்களில் சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள், சுமங்கலி பூஜைகளும் நடக்கிறது. ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு சென்று வருகின்றனர். இக்கோயிலுக்கு செல்லும் பாதை ரோடு வசதி இன்றி குண்டும், குழியுமாக இருப்பதோடு குப்பைகள் தேங்கியுள்ளது. மின்கம்பங்கள் இருந்தும் விளக்குகள் இல்லை. கோயில் அருகே உள்ள பாதையின் இருபுறத்தையும் தனிநபர்கள் ஆக்கிரமித்துள்ளனர். மழைக்காலத்தில் சேரும் சகதியுமாக காணப்படுகின்றன. இதனால் நடந்து செல்ல முடியாத நிலையில் பக்தர்கள் சிரமம் அடைகின்றனர். ரோட்டை சீரமைக்கவும், இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிடவும் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் செய்துள்ளனர். ரோடு வசதி செய்து தருவதுடன் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.நகராட்சி துணை தலைவர் சங்கர் கூறுகையில், "ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்,என்றார்.