Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோயம்புத்தூர் யோக விநாயகர் கோயிலில் ... பிள்ளையார்பட்டியில் தேரோட்டம்: சந்தனக்காப்பு அலங்காரம்! பிள்ளையார்பட்டியில் தேரோட்டம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மெலட்டூரில் சித்தி புத்தி தட்சிணாமூர்த்தி விநாயகருக்கு திருக்கல்யாணம்!
எழுத்தின் அளவு:
மெலட்டூரில் சித்தி புத்தி தட்சிணாமூர்த்தி விநாயகருக்கு திருக்கல்யாணம்!

பதிவு செய்த நாள்

14 செப்
2015
03:09

தஞ்சை: மெலட்டூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஸ்ரீசித்தி புத்தி ஸமேத அருள்மிகு தட்சிணாமூர்த்தி விநாயகருக்கு திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தஞ்சையை அடுத்துள்ள மெலட்டூர் கிராமத்தில் ஸ்ரீசித்தி புத்தி ஸமேத அருள்மிகு தட்சிணாமூர்த்தி விநாயகர் கோயில் அமைந்துள்ளது.

இக்கோவிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சதுர்த்தி பிரமோற்சவ விழா நடைபெறும் 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் 7ம்நாள் அன்று திருக்கல்யாணம் நடைபெறும். அதைப்போல் இந்தாண்டு இவ்விழா கடந்த 7ம் தேதி தொடங்கி தினமும் பல்வேறு வாகனத்தில் வீதியுலா நடைபெற்று விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பலவகையான சீர்வரிசைகளை கொண்டுவந்தனர். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் முழங்க யாகம் வளர்க்கப்பட்டு விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புதியதாக பட்டு வேட்டி, பட்டு சேலை அணிவித்து ஸ்ரீ சித்தி புத்தி சமேத தட்சிணாமூர்த்திக்கு திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. பின்னர் சிறப்பு தீபாரதனை காட்டப்பட்டது. விநாயகருக்கு திருக்கல்யாணம் தமிழ்நாட்டில் ஒருசில இடங்களில் மட்டுமே நடைபெறுகிறது. அதில் மெலட்டூரில் நடைபெறும் திருக்கல்யாண நிகழ்வு மிகவும் விசேசம். ஏனென்றால் ஸ்ரீ ஞான புராணத்தில் ஸ்ரீ கற்க மகரிஷியால்  வர்ணிக்கப்பட்டிருக்கின்ற 108 கணபதி ஸ்தலங்களில் 81 வது ஸ்தலமாக ஸ்ரீசித்தி புத்தி ஸமேத அருள்மிகு தட்சிணாமூர்த்தி விநாயகர் உள்ளது. இத்திருக்கல்யாண வைபோகத்தில் கலந்து கொண்டால் திருமண தடை அகலும். குழந்தை பேறு உண்டாகும். கல்வி வளம் பெருகும் என்பது ஐதீகம். இந்த திருமண நிகழ்ச்சியில் தமிழகத்தில் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வேடசந்தூர்; வேடசந்தூர் தேவிநாயக்கன்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசத்தை முன்னிட்டு ஊர் மக்கள் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
அன்னூர்; குமரன் குன்று கல்யாண சுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேரோட்டத்தில் பல ஆயிரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar