காரைக்கால் மஸ்தான் சாஹிபு தர்கா கந்தூரி விழா கோலாகலம்!
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜூலை 2011 11:07
காரைக்கால்: காரைக்கால் மஸ்தான் சாஹிபு தர்காவின் 188வது ஆண்டு கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வான சந்தன கூடு ஊர்வலம் நடந்தது. காரைக்கால் திருநள்ளார் சாலையில் உள்ள பெரியபள்ளி வாசல் என்ற மஸ்தான் சாஹிபு வலியுல்லாஹ் தர்கா உள்ளது. இது சவூதி அரேபியாவிலிருந்து 18ம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு இறைப்பணி செய்ய வந்த மஸ்தான் சாஹிப்பின் நினைவாக இந்த பள்ளிவசால் கட்டப்பட்டது. இந்த பள்ளிவாசலில் ஆண்டுதோறும் கந்தூரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவவாண்டு கந்தூரி விழா கடந்த மாதம் 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று இரதம், பல்லக்கு ஊர்வலம் நடந்தது. இதில் பல்வேறு வடிவங்களில் அலங்கரிக்கப்பட்ட பல்லக்குகள் முக்கிய வீதிகள் வழியாக கொண்டு செல்லப்பட்டது. நேற்று முன்தினம் இரவு ஹலவு என்னும் போர்வை வீதிவலமும், இரவு 11.30 மணிக்கு மின்சார சந்தனக்கூடு ஊர்வலம் நடந்தது. அதைத்தொடர்ந்து சாம்பிராணி சட்டி, சந்தனம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட அலங்கார ஊர்திகளும் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றது. அதிகாலை வலியுல்லாஹ் ரவ்லா ஷரிபில் சந்தனம் பூசுதல் நடந்தது. விழாவில் ஏராளமான இஸ்லாமிய சமூகத்தினர் கலந்து கொண்டனர்.