Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஜலக்கண் மாரியம்மன் கோவில் திருவிழா! ஆனைமலை கோவில்களில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு! ஆனைமலை கோவில்களில் தேய்பிறை அஷ்டமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை கிரிவலப்பாதை அகலப்படுத்தும் ஆய்வுப்பணி துவக்கம்
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலை கிரிவலப்பாதை அகலப்படுத்தும் ஆய்வுப்பணி துவக்கம்

பதிவு செய்த நாள்

07 அக்
2015
11:10

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், ரூ.65 கோடி மதிப்பில் கிரிவலப்பாதை அகலப்படுத்துவதற்கான ஆய்வு பணி துவங்கியது. முதல்வர் ஜெயலலிதா கடந்த, 25ம் தேதி, சட்டசபையில் விதி, 110ன் கீழ் திருவண்ணாமலை நகரில் கோவிலை சுற்றி அமைந்துள்ள கிரிவலப்பாதையில் பக்தர்கள் வசதிக்காக முதல் கட்டமாக, 7 மீட்டர் முதல், 10 மீட்டர் வரை அகலமுள்ள நடைபாதை மற்றும் வடிகால் வசதி ஏற்படுத்தப்படும் என்றும், மேலும் ஓய்வு அறை வசதி செய்து தரப்படும் என்றும், இப்பணி ரூ.65 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்தார். இதன் அடிப்படையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில், 14 கி.மீ தூரமுள்ள கிரிவலப்பாதையினை நெடுஞ்சாலைத்துறை மூலம் அகலப்படுத்தும் பணியின் முதல் கட்டமாக நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ஜெயசேகர் தலைமையில் எல்லை நிர்ணயம் செய்வதற்கு அளவீடு செய்யப்பட்டது. இதில், கிரிவலப்பாதையில் உள்ள திருவண்ணாமலை நகராட்சி, அத்தியந்தல், அடி அண்ணாமலை, ஆடையூர், வேங்கிக்கால் ஊராட்சியின் சார்பில் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் எல்லை நிர்ணய ஆய்வுப்பணியை மேற்கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar