Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! சபரிமலை நடை 15ம் தேதி திறப்பு: 16ல் புதிய ஐம்பொன் படிகள் பிரதிஷ்டை! சபரிமலை நடை 15ம் தேதி திறப்பு: 16ல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இன்று உலகம் அழியப் போகிறதாம் : கிறிஸ்தவ அமைப்பு எச்சரிக்கை!
எழுத்தின் அளவு:
இன்று உலகம் அழியப் போகிறதாம் : கிறிஸ்தவ அமைப்பு எச்சரிக்கை!

பதிவு செய்த நாள்

07 அக்
2015
12:10

நியூயார்க் : இன்று (அக்,7) உலகம் அழியப் போவதாக பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பிலடெல்பியாவில் உள்ள இ-பைபிள் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது. அதுவும் தீயினால் தான் உலகம் அழிய உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகம் அழியப் போகிறது என அவ்வப் போது செய்திகள் பரவி, அது பொய்த்தும் போய்யுள்ளது. 2011ம் ஆண்டு மே 21ம் தேதி உலகம் அழியப் போவதாக கூறப்பட்டது. அது பொய்யானதால் அந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் உலகம் அழியும் என கூறப்பட்டது. தற்போது அக்டோபர் 7 ம் தேதி புதன்கிழமையன்று உலகம் அழியும் என பைபிளில் கூறப்பட்டுள்ளதாக இ-பைபிள் கூட்டமைப்பின் தலைவரும், நிறுவனருமான கிறிஸ் மெக்கேன் கூறி உள்ளார். அதுவும் தீயினால் தான் அழிவு நடைபெறும் என கூறி உள்ளார்.

செப்டம்பர் 27 ம் தேதி தோன்றிய "சூப்பர் மூன்" என வர்ணிக்கப்பட்ட சிவப்பு நிலா, உலக அழிவின் ஆரம்பம் என சில கணிப்புக்கள் தெரிவிக்கின்றன. ரத்த நிலவு தோன்றும் நாள் உலக அழிவு நிகழ்வுகளின் துவக்கம் என மத தலைவர்கள் சிலரும் தெரிவித்துள்ளனர். அன்று துவங்கி 7 ஆண்டுகளுக்குள் மெல்ல உலகம் அழியும் என கூறப்பட்டது. ஆனால் தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய கணிப்பின்படி அக்டோபர் 7 ம் தேதி உலகம் அழியும் என கூறப்பட்டுள்ளது. இதற்கு திடமான ஆதாரங்கள் இருப்பதாக மெக்கேன் கூறி உள்ளார். உலக அழிவு தொடர்பாக பல கோட்பாடுகளை விஞ்ஞானிகள் கூறி உள்ளனர். ஆனால் இந்த புதன்கிழமைக்கும் உலக அழிவிற்கும் எந்த தொடர்பும் இருப்பதாக எதிலும் கூறப்படவில்லை. சூரியனில் வெப்பம் அளவுக்கு அதிகமாகும் போது இது போன்ற சிவப்பு நிலா தோன்றும், அதுவும் 7.6 பில்லியன் ஆண்டுக்கு ஒருமுறை இது போன்று நிகழும் எனவும் விஞ்ஞானிகள் பலர் கூறுகின்றனர். இதனை பலரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். விஞ்ஞான ரீதியிலான காரணங்கள் ஒருபுறம் இருந்தாலும், இன்று உலகம் அழியும் என மெக்கேனும் அவரது குடும்பத்தினரும் உறுதிபட கூறி வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாரூர் : ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் குருபெயர்ச்சி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ... மேலும்
 
temple news
தஞ்சாவூர் தஞ்சாவூர் மாவட்டம் தென்குடித்திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில், (பரிகார ஸ்தலம்),  குரு ... மேலும்
 
temple news
சோழவந்தான், சோழவந்தான் அருகே குருவித்துறை குருபகவான் கோயிலில் இன்று மாலை குரு பெயர்ச்சி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருக்கோஷ்டியூர், திருப்புத்தூர் அருகே பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயிலில்  குரு பெயர்ச்சியை ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பேரூரில், பேரூர் பட்டி நாயகர் சைவ நெறி அறக்கட்டளை சார்பில், 450 கிலோ பூக்கள் கொண்டு, மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar