Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை நடை 15ம் தேதி திறப்பு: 16ல் ... இன்று.. எல்லா பாவ விளைவுகளும் அழிக்கப்படும் இந்திரா ஏகாதசி! இன்று.. எல்லா பாவ விளைவுகளும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்!

பதிவு செய்த நாள்

08 அக்
2015
10:10

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேர் வடம்பிடித்து இழுத்தனர்.

வத்திராயிருப்பும் அதை சுற்றிய கிராமங்கள் செழிப்புடன் இருக்க காரணம் மழைக்கு அதிபதியான முத்தாலம்மன்தான் என்பது இப்பகுதியினர் நம்பிக்கை. அதன் காரணமாக ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் ஒருவாரம் விழா எடுத்து வழிபடுவார்கள். விழாவின் இறுதிநாளில் தேரோட்டம் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு திருவிழா செப்.30 ல் கலைவிழாவுடன் துவங்கியது. மண் சிலை காணிக்கை: இயல், இசை, நாடகம் என முப்பெரும் கலை நிகழ்ச்சிகளுடன் நடந்தன. இறுதி நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. அதிகாலை 1 மணிக்கு அம்மன் தேருக்கு எழுந்தருள ஊஞ்சல் வாகனத்தில் எழுந்தருளினார். சிறப்பு பூஜைகளுக்கு பின் பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுக்க துவங்கினர். பல்வேறு வீதிகள் வழியாக சுற்றிவந்த தேர் மதியம் 1.45 மணிக்கு நிலைக்கு வந்தது. கோயிலில் எழுந்தருளிய அம்மனுக்கு பெண்கள் மஞ்சள்நீர் ஊற்றி, மண் சிலை காணிக்கை செலுத்தி வழிபட்டனர்.

பிரியாவிடை: தொடர்ந்து ஆண்களின் மஞ்சள் நீராட்டு விழா, பறையர்குல மாவிளக்கு வழிபாடு, அம்மன் அருள்வாக்கு வழங்குதல் நடந்தது. அம்மன் முதல்நாள் இரவு தோன்றி மறுநாள் இரவு மறைந்து விடுவார். கோயிலில் இந்த ஒருநாள் மட்டுமே உருவமாய் இருப்பார். விழா முடிந்தவுடன் அம்மனை அன்றைய தினமே ஆற்று நீரில் கரைத்து விடுவார்கள். அதற்காக அம்மனை வழியனுப்பும் "பிரியாவிடை நிகழ்ச்சி நடந்தது. அம்மன் கோயிலை மூன்றுமுறை சுற்றிவந்து பக்தர்களிடம் பிரியாவிடைபெற்றார். ஏராளமான பக்தர்கள் கோயிலை சுற்றி நின்று பூக்களை தூவி அம்மனை வழியனுப்பினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar