Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வீரராகவர் கோவில் குளத்தில் வண்டல் ... ஆனைமலை மாசாணியம்மனுக்கு பக்தர்கள் ரூ.50 லட்சம் காணிக்கை! ஆனைமலை மாசாணியம்மனுக்கு பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மீனாட்சி அம்மன் கோயில் பகுதிக்கு முன்னுரிமை: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வாய்ப்பு!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மீனாட்சி அம்மன் கோயில் பகுதிக்கு முன்னுரிமை: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வாய்ப்பு!

பதிவு செய்த நாள்

10 அக்
2015
10:10

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பகுதி சார்ந்த வளர்ச்சிப் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதால், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இப்பகுதி முதற்கட்டமாக தேர்வு செய்யப்படும் வாய்ப்புகள் உள்ளன.ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், இக்கோயில் மற்றும் சுற்றுப் பகுதியில் அடிப்படை உள்கட்டமைப்பு, போக்குவரத்து மற்றும் நெரிசலை குறைத்தல், பகுதி மேம்பாடு திட்டத்தை முதல் திட்டமாக வாக்கெடுப்பில் மாநகராட்சி வெளியிட்டது. அதை தொடர்ந்து, திருப்பரங்குன்றம் கோயில் பகுதிகள், வண்டியூர் கண்மாய் பகுதிகள், காந்திமியூசியம் சுற்றுப் பகுதிகள், மாரியம்மன் தெப்பக்குளம், புட்டுத்தோப்பு வைகை குடியிருப்பு பகுதிகள், விளாங்குடி ஆனையூர் பகுதி மேம்பாடு என தனிப்பகுதிகளாக 7 திட்டங்கள் இடம் பெற்றிருந்தன.பொதுவான திட்டங்களாக மாநகராட்சி பகுதிகளில் முழுமையான குடிநீர் வினியோகம், பாதாள சாக்கடை, திடக்கழிவு மேலாண்மை, மழைநீர் வடிகால் உள்ளிட்ட

10 திட்டங்கள் மக்களின் வாக்கெடுப்பிற்கு கொண்டுவரப்பட்டன.செப்., 28 முதல் அக்., 4 வரை நடந்த வாக்கெடுப்பில் 73,572 மக்கள் பங்கேற்றனர். இவை அனைத்தும் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டு, இத்திட்டம் தொடர்பான வரைவு அறிக்கை தாக்கல் செய்யும் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அளித்துள்ள வாக்குகளின் அடிப்படையிலும், மாநகராட்சி அதிகாரிகள் கருத்துகள், எதிர்காலத்திற்கு அத்தியாவசியமான திட்டங்கள் என்ற மதிப்பீடுகளின் அடிப்படையிலும் எந்த திட்டத்திற்கு முன்னுரிமை அளித்து தேர்வு செய்வது என்பது குறித்த ஆலோசனை கூட்டம் சென்னையில் தொடர்ந்து நடந்து வருகிறது. மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:வாக்கெடுப்பு பட்டியலில் உள்ள அனைத்து திட்டங்களுமே மதுரைக்கு மிகவும் தேவையானவை. அதனால் இதில் எந்த பணிகள் நிறைவேற்ற உத்தரவுகள் வந்தாலும், அதை சிறப்பாக செயல்படுத்துவோம். மதுரைக்கு அதிக அளவில் வெளியூர்களில் இருந்து மக்கள், மீனாட்சி அம்மன் கோயில் பகுதிகளுக்கு வருவதால் அப்பகுதி முக்கியத்துவம் பெற்றுள்ளது.இதனால் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் பயன் அனைத்து பகுதியினருக்கும் கிடைத்து போன்று இருக்கும். புராதனமிக்க நகர் பட்டியலிலும் இது இடம்பெற்றுள்ளதால், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முதற்கட்ட பணிக்கான தேர்வில் மீனாட்சி அம்மன் கோயில் பகுதிசார்ந்த பணிகளுக்கு முக்கியத்துவம் கிடைக்கும் வாய்ப்பு அதிகம், என்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar