Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மயிலாடுதுறை ஸ்ரீஅபய ஆஞ்சனேயருக்கு ... புதுச்சேரி மகாளய அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம்! புதுச்சேரி மகாளய அமாவாசையையொட்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நவராத்திரி வழிபாடு இன்று துவக்கம்; கோயில், வீடுகளில் கொலுக்காட்சி!
எழுத்தின் அளவு:
நவராத்திரி வழிபாடு இன்று துவக்கம்; கோயில், வீடுகளில் கொலுக்காட்சி!

பதிவு செய்த நாள்

13 அக்
2015
01:10

வத்திராயிருப்பு: பெண்கள் விரும்பி கொண்டாடும் நவராத்திரி விழா இன்று துவங்குகிறது.
இதையொட்டி கோயில், வீடுகளில் கொலு பொம்மைகள் அலங்கரிக்கப்பட்டு கொலுதர்பார்
தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்துக்களுக்கான முக்கிய பண்டிகைகளில் நவராத்திரி விழா மிக முக்கியமானது. மற்ற
பண்டிகைகள் ஆண்கள், பெண்கள் என பாகுபாடின்றி கொண்டாடப்பட்டாலும் நவராத்திரி விழா முழுக்க பெண்களுக்கான ஒரு பண்டிகையாக கருதப்படுகிறது. பெண்கள் இதை ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடுவர். வீட்டில் கொலு வைப்பதால் அக்குடும்பத்தில் உள்ள பிரச்னைகள் நீங்குவதுடன், சுபிட்சம் கிடைத்து நல்லகாரியங்கள் நடக்கும் என்பது நம்பிக்கை.

இதற்காக கொலு பொம்மைகளை அலங்கரித்து வைத்து பூஜைகள் செய்து பெண்கள்
விரதமிருப்பார்கள்.

தாலிக்கயிறு: மாலையில் அருகில் வசிக்கும் பெண்களை வீட்டிற்கு அழைத்து கொலுவை வணங்கச் செய்து பக்தி பாடல்கள் பாடச்சொல்லி கேட்பார்கள். பின்னர் அவர்களுக்கு நிவேதன பிரசாதத்துடன் தாலிக்கயிறு, மஞ்சள், குங்குமம், ஜாக்கட் துணி வழங்கி வழியனுப்பி வைப்பர். 9 நாட்கள் நடக்கும் விழாவின் இறுதிநாளில் தாங்கள் வணங்கும் துர்க்கையம்மனுக்கு சிறப்பு வழிபாடு செய்து முதல்நாள் வைக்கப்பட்ட பூரண கும்பத்தை அகற்றுவார்கள். பல்வேறு பாரம்பரிய வழிபாட்டு முறைகளை உள்ளடக்கிய இந்த நவராத்திரி விழா இன்று மாலையில் துவங்குகிறது.

பொம்மைகள்: இதற்காக கடந்த சிலநாட்களாகவே பெண்கள் வீடுகளை சுத்தம் செய்து பொம்மைகளை தர்பாரில் வரிசைப்படுத்தி , இறைவனது நாடகங்களையும், லீலைகளையும் காட்சிப்படுத்தி கும்பம் வைத்து தயார்நிலையில் வைத்துள்ளனர். இன்று மாலை பூஜைகளுடன் கொலுதர்பாரை துவக்க உள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் இன்று தேனூர் மண்டபத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாள் சுவாமி, ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில் சித்திரை பெருவிழாவில் திருத்தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் உள்ள தாஸபக்த ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.  கோடை வெயில் ... மேலும்
 
temple news
காரைக்கால்: சனிக்கிழமை மற்றும் கோடைவிடுமுறையை முன்னிட்டு இன்று காரைக்கால் சனீஸ்வரபகவான் கோவிலில் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி,சோமநாதர் கோயிலில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வந்த சித்திரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar