Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செந்தூர் முருகன் கோயிலில் ... ஸ்ரீரங்கம் கும்பாபிஷேகம்: காவிரியிலிருந்து புனித நீர் ஊர்வலம்! ஸ்ரீரங்கம் கும்பாபிஷேகம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை நடை திறப்பு: தயாரானது சன்னிதானம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சபரிமலை நடை திறப்பு: தயாரானது சன்னிதானம்!

பதிவு செய்த நாள்

16 நவ
2015
10:11

சபரிமலை: மண்டலகால பூஜைகளுக்காக சபரிமலை நடை (நவ.16ல்) மாலை திறக்கிறது. அதிகாலை கார்த்திகை முதல் தேதிக்காக நடை திறக்கும் போது தொடங்கும் மண்டல காலத்தில் திரண்டு வரும் பக்தர்களை வரவேற்க சன்னிதானம் தயாராகி விட்டது.

கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் 41 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் பூஜை சபரிமலையில், ஒரு மண்டல காலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு, நாளை கார்த்திகை பிறந்து மண்டலகாலம் தொடங்குகிறது. இதற்காக சபரிமலை நடை இன்று மாலை 5:30 க்கு திறக்கிறது. கடந்த ஒரு ஆண்டு காலமாக சபரிமலையில் தங்கி பூஜைகள் செய்து வரும் மேல்சாந்தி கிருஷ்ணதாஸ் நம்பூதிரி நடைதிறந்து தீபம் ஏற்றுவார். அதை தொடர்ந்து கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் ஒரு ஆண்டு காலத்துக்கான மேல்சாந்திகளாக தேர்வு செய்யப்பட்டுள்ள சபரிமலை- சங்கரன் நம்பூதிரி, மாளிகைப்புறம்- இ.எஸ். உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி ஆகியோர் இருமுடி கட்டு ஏந்தி ஸ்ரீகோயில் முன்புறம் வருவர். மாலை 6.30 மணிக்கு புதிய மேல்சாந்திகளுக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு அபிஷேகம்நடத்தி, ஐயப்பன் மூலமந்திரம் சொல்லிக்கொடுத்துஸ்ரீகோயிலுக்கு அழைத்து செல்வார். வேறு விசேஷபூஜைகள்எதுவும் நடைபெறாது. இரவு11மணிக்கு நடை அடைக்கப்படும்.

மண்டல பூஜை: நாளை அதிகாலை 3 மணிக்கு புதிய மேல்சாந்தி கிருஷ்ணதாஸ் நம்பூதிரி நடைதிறந்ததும் இந்த ஆண்டுக்கான மண்டலகாலம் தொடங்கும். தொடர்ந்து தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு ஐயப்பனுக்கு அபிஷேகம் நடத்தி பிரசாதம் வழங்கியதும், நெய்யபிஷேகம் தொடங்கும். அன்றிலிருந்து தொடர்ச்சியாக 41 நாட்களும் அதிகாலை 3 மணிக்கு நடை திறந்து பூஜைகள் நடைபெறும். டிச., 27-ம் தேதி மண்டலபூஜை நடைபெறும். மண்டல காலத்தில் திரண்டு வரும் பக்தர்களை வரவேற்க சன்னிதானம் தயாராகி விட்டது. மரக்கூட்டத்தில் இருந்து சரங்குத்தி வரும் வழியில் ஆறு கியூ காம்ப்ளக்ஸ் கட்டப்பட்டுள்ளன. இந்த ஆண்டு முதல் சன்னிதானத்தில் உள்ள கழிவு நீர் சீவேஜ்பிளான்டில் சுத்திகரித்து பம்பைக்கு அனுப்பப்படும். அன்னதானம் விரிவு படுத்தப்பட்டுள்ளது. முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்காக தனி கியூ வசதி செய்யப்பட்டுள்ளது. முக்கிய வழிபாடு முன்பதிவை ஆன்லைனில் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்கும் அறைகளையும் ஆன்லைன் புக்கிங் செய்ய முடியும். கடந்த 15 நாட்களாக அப்பம் - அரவணை தயாரித்து ஸ்டாக் செய்யப்பட்டுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 6 நாட்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை: ஆவணி மாதம் துவாதசி  திதியை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar