Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தி.மலை தீப விழா: தங்க சூரிய பிறை ... திருச்செந்தூரில் ஆணவத்துடன் வந்த சூரனை சம்ஹாரம் செய்தார் முருகப்பெருமான்! திருச்செந்தூரில் ஆணவத்துடன் வந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுவாமிமலை முருகன் கோயிலில் சூரசம்ஹாரம்!
எழுத்தின் அளவு:
சுவாமிமலை முருகன் கோயிலில் சூரசம்ஹாரம்!

பதிவு செய்த நாள்

17 நவ
2015
06:11

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. சுவாமிமலை முருகன் கோயில்,முருகனின் ஆறுபடை வீடுகளில் 4வது படைவீடாக திகழ்கிறது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றால் சிறப்புடைய இந்த கோவிலில் தந்தைக்கு ஓம் என்னும் பிரணவ மந்திரத்தை உபதேசித்த குருமூர்த்தியாக திகழ்வதால் சிவகுருநாதனாக இத்தலத்து முருகன் திகழ்கிறார்.

சிறப்பு பெற்ற இந்த கோயிலில் கடந்த 11ம் தேதி மாலை 6.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் கந்த சஷ்டி விழா தொடங்கியது. தொடர்ந்து வருகிற 27ம் தேதி வரை இந்த விழா நடைபெறுகிறது. கந்தசஷ்டியின் முதல்நாள் விழாவான, கடந்த 12ம் தேதி காலை 10.30 மணிக்கு சண்முகர், விக்னேஸ்வரர், நவ வீரர் மற்றும் பரிவாரர்களுடன் மலைக்கோயில்லிருந்து படி இறங்கி உற்சவ மண்டபத்திற்கு எழுந்தருளுதல் நிகழ்ச்சியும், இரவு படிச்சட்டத்தில் சாமி வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றன. அதனை தொடர்ந்து தினமும் காலை, மாலை என இரு வேளைகளிலும் படிச்சட்டத்தில் சாமி வீதியுலா நடைபெற்றது. இந்தநிலையில், 17ம் தேதி காலை கந்தசஷ்டியின் 6-ம் நாள் திருவிழாவன்று சண்முகருக்கு 108 சங்காபிஷேக அர்ச்சனையும், ஆராதனையும் நடைபெற்றன. மாலை சண்முகர் அம்பாளிடம் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சியும், தொடர்ந்து சூரசம்ஹாரமும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி மகா யாகம் ... மேலும்
 
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar