Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news ஸ்ரீரங்கம் கோயில் கும்பாபிஷேகம் ... சபரிமலை மண்டல காலம் துவக்கம்: அலைமோதிய பக்தர்கள்! சபரிமலை மண்டல காலம் துவக்கம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிக்கல் சிங்காரவேலவருக்கு வியர்த்த மகிமை: பக்தர்கள் பரவசம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 நவ
2015
10:11

நாகப்பட்டினம்: நாகை அடுத்த சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு, திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்ய முருகப்பெருமான் சக்திவேல் வாங்கும் போது,மானிடருக்கு வேர்ப்பது போல் மேனியெங்கும் வியர்க்கும் மகிமை நடைபெற்றது.

Default Image
Next News

நாகை அடுத்த சிக்கலில் அறுபடை வீடுகளுக்கு இணையான சிங்காரவேலவர் கோவில் உள்ளது. முருகப்பெருமானின் அவதார நோக்கமான சூரசம்ஹாரத்திற்கு, இக்கோவிலில் தான் அன்னை வேல்நெடுங்கண்ணியிடம் சக்திவேல் வாங்கி, திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்ததாக கந்த புராண வரலாறு. திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி, அருணகிரிநாதர்,சிதம்பரமுனிவர் ஆகியோர்களால் பாடல் பெற்ற, இக்கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 12 ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. நாள்தோறும் சிங்காரவேலவர் ஆட்டுக்கிடா, தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக,திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்வதற்காக,நேற்று முன்தினம் இரவு, சிங்காரவேலவர், அன்னை வேல்நெடுங்கண்ணியிடம், சக்திவேல் வாங்குவதற்காக, திருத்தேரில் இருந்து இறங்கி கோவிலுக்குள் ஆக்ரோஷத்துடன் வந்தார்.

ஆக்ரோஷத்துடன்,அன்னையிடம் சக்திவேலைப் பெற்று தமது சன்னதியில் அமர்ந்த முருகப் பெருமானுக்கு, மானிடருக்கு வியர்ப்பது போன்று, சிங்காரவேலவரின் திருமேனியெங்கும் வியர்வை அரும்பியது. முருகப்பெருமானின் ஆக்ரோஷ வெப்பத்தை தாங்கிக் கொள்ள இயலாமல் சன்னதியின் சுவர்களிலும் வியர்வை துளிகள் அரும்பியிருந்த காட்சி பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது. நிகழ்ச்சியில்,கலெக்டர் பழனிசாமி,எஸ்.பி.,அபினவ்குமார் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் விண்ணைப்பிளந்த அரோகரா கோஷத்துடன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: பாலக்காடு வலியபாடம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச உற்சவம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி கூக்கல்தொரை ஸ்ரீ ஜெடைய லிங்க சுவாமி திருக்கோவில் விழா கோலாகலமாக ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுார் ஆமைக்குளம் பாண்டியார் டான்டீ அருள்மிகு சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் பவுர்ணமி பூஜை நடந்தது.நடுவீரப்பட்டு அடுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் என்.ஜி.ஜி.ஓ., நகர், சக்தி விநாயகர் கோவிலில் பெண்கள் பால்குடம் எடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar