Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமநாதபுரம் முருகன் கோயில்களில் ... குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் சூரசம்ஹாரம் குன்றக்குடி சண்முகநாத பெருமான் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வத்திராயிருப்பில் சூரசம்ஹாரம் கோலாகலம்!
எழுத்தின் அளவு:
வத்திராயிருப்பில் சூரசம்ஹாரம் கோலாகலம்!

பதிவு செய்த நாள்

18 நவ
2015
11:11

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பில் நடந்து வரும் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நேற்று கோலாகலமாக நடந்தது.  ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். வத்திராயிருப்பு காசிவிஸ்வநாதர் கோயிலில் கடந்த 6 நாட்களாக கந்தசஷ்டி விழா விமரிசையாக நடந்து வருகிறது.  இதற்காக நவ. 12 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.  தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதணைகளுடன் பூஜைகள் நடந்தது.   சுவாமி தினமும் வெவ்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி அருள்பாலித்தார்.  ஆறாம் நாளான நேற்று மகாசஷ்டி வழிபாடு நடந்தது.   காப்புக்கட்டி விரதம் இருந்த பக்தர்கள் வெள்ளவிநாயகர் கோயிலில் இருந்து  சஷ்டி விழாக்குழு அமைப்பாளர் கதிரேசன் தலைமையில் பால்குடம், காவடி எடுத்தபடி ஊர்வலமாக காசிவிஸ்வநாதர் கோயிலுக்கு வந்தனர்.   அங்கு சுப்பிரமணியசுவாமிக்கும், வள்ளி, தெய்வானைக்கும் அபிஷேகம் நடந்தது.  மாலையில்  முத்தாலம்மன் திடல் மைதானத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் சுப்பிரமணியர் சூரபத்மனை வதம் செய்து அழித்தார்.   பக்தர்கள் கைதட்டியும், பூக்களை துõவியும் வழிபட்டனர்.   பின்னர் சுவாமி வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.   மீண்டும் கோயில் சென்ற சுவாமிக்கு மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.   இந்நிகழ்ச்சிகளை சுற்றுப்புற கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar