Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பூரில் "அரோகரா கோஷம் முழங்க ... சபரிமலையில் பக்தர்களுக்கு அடிப்படை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி: பக்தர்கள் திரண்டனர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி: பக்தர்கள் திரண்டனர்

பதிவு செய்த நாள்

18 நவ
2015
12:11

பொள்ளாச்சி: ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில், முருகப்பெருமான், சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி பொள்ளாச்சியில் நடந்தது. பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவிலில், சூரசம்ஹாரத்திருவிழா, கடந்த 12ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து, சிறப்பு பூஜைகள் நடந்தது.நேற்றுமுன்தினம் சிவபெருமானிடமிருந்து சுப்பிரமணியசாமி வேல் வாங்கும் உற்சவம் நடந்தது. நேற்று மாலை, 3:00 மணிக்கு பேரூர் இளைய பட்டம் மருதாசல அடிகள் முன்னிலையில், சூரசம்ஹாரத்திருவிழா நடந்தது. சுவாமி திருக்கோவிலிலிருந்து மாலை, 5:00 மணிக்கு புறப்பட்டு, எஸ்.எஸ்., கோவில் வீதி கிழக்கு வழியாக சென்று, சத்திரம் வீதியும், தெப்பக்குளம் வீதியும் சந்திக்கும் சந்திப்பில், முதல் சூரன் கஜமுகா சூரன் வதையும்; தெப்பக்குளம் வீதி வழியாக சென்று தெப்பக்குளம் வீதியும், வெங்கட்ரமணய்யர் வீதியும் சந்திக்கும் இடத்தில் இரண்டாவது சூரன் சிங்கமுகாசூரன் வதையும் நடந்தது. வெங்கட்ரமணய்யர் வீதியும், ராஜாமில் ரோடு சந்திக்கும் இடத்தில் மூன்றாவது சூரன் பானுகோபன் வதையும்; உடுமலை ரோடு வழியாக சென்று தேர்நிலையத்தில் நான்காவது சூரன் சூரபத்மன் வதையும் நடந்தது. பின்னர் மீண்டும் திருக்கோவிலை வந்தடைந்தது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில், முருகப்பெருமான், சூரனை வதம் செய்தார். அப்போது, பக்தர்கள், அரோகரா கோஷம் எழுப்பியபடி, வதம் செய்யும் நிகழ்ச்சியை கண்டுகளித்தனர். அன்ன ஆகாரமின்றி விரதமிருந்து, சூரசம்ஹாரம் முடிந்து, வாழைத்தண்டு, இஞ்சி, பச்சைமிளகாய், ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, சாத்துக்குடி, மாதுளை, கொய்யா, வெள்ளரிக்காய் போன்ற பழங்கள், தயிர், கருவேப்பிலை, கொத்துமல்லித்தழை முதலியவற்றை கொண்டு, பிரசாதம் தயாரித்து, சுப்பிரமணிய சுவாமிக்கு படைத்து விரதத்தை முடித்தனர். தண்டு விரதம் இருக்கும் பழக்கம், பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மட்டுமே காணக்கூடிய ஒன்றாகும். தொடர்ந்து, இன்று காலை, 9:00 மணிக்கு மகா அபிேஷகம், மாலை, 6:00 மணிக்கு திருகல்யாண உற்சவமும் நடக்கிறது.நாளை மாலை, 6:00 மணிக்கு திருஊஞ்சல் உற்சவ பூர்த்தி நிகழ்ச்சியும் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழாவின் நான்காம் நாள் விழாவில் அம்மன் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: லட்சுமி நரசிம்மர் கோவில் நவராத்திரி உற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.விழுப்புரம் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar