Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
48 ஆண்டுக்குப் பின் பீடத்துடன் சுவாமி ... குமரி பகவதியம்மன் கோயிலில் ஆடி களப ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நெல்லையப்பர் கோயிலில் ரூ.8 லட்சம் செலவில் அன்னதானக் கூடம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஆக
2011
11:08

திருநெல்வேலி : நெல்லையப்பர் கோயிலில் ரூ.8 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள அன்னதானக் கூடம் திறக்கப்படாமல் உள்ளது. அன்னதானக் கூடத்தை திறக்க அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.நெல்லையப்பர் கோயில் 14.5 ஏக்கர் பரப்பளவுடையது. இந்த கோயிலில் கோடை கால வசந்த கட்டளை நடத்துவதற்காக மன்னர் காலத்திலேயே வசந்த மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. நெல்லையப்பர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் வசந்த உற்சவ விழா இங்கு தான் நடைபெறும்.தமிழக அரசின் அன்னதான திட்டம் நெல்லையப்பர் கோயிலில் செயல்படுத்தப்பட்டு வருவதால் தினந்தோறும் 150 ஏழை பக்தர்களுக்கு வசந்த மண்டபத்தில் வைத்து உணவு சமைத்து பரிமாறப்படுகிறது. வசந்த மண்டபத்தில் வைத்து உணவு சமைக்கப்படுவதாலும், பரிமாறப்படுவதாலும் அந்த இடங்கள் விறகு அடுப்பின் புகைபட்டும், பக்தர்கள் சாப்பிடும் இலைகள் ஆங்காங்கே போடப்பட்டும் பாழாவதாக பக்தர்கள் தரப்பில் இருந்து புகார்கள் சென்றன.இதையடுத்து காந்திமதிஅம்பாள் சன்னதிக்கு தெற்கு பகுதியில் உள்ள காலியிடத்தில் அன்னதானக் கூடம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக அறநிலையத்துறை நிதியில் இருந்து ரூ.8 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் முடிவடைந்துள்ளது. நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள அன்னதானக் கூடத்தில் காஸ் அடுப்பு வைத்து சமையல் செய்ய வசதி, பக்தர்கள் அமர்ந்து சாப்பிட கடப்பா கல் டேபிள், பெஞ்ச், டைல்ஸ் பதிக்கப்பட்ட தரைத்தளம், சமையல் பொருட்கள் வைக்க பாதுகாப்பு அறை, பேன் வசதி, வாஷ் பேசின், 150 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து சாப்பிட வசதி செய்யப்பட்டுள்ளது.ஆனால் அன்னதானக் கூடம் கட்டுமான பணிகள் முடிவடைந்து 6 மாதம் மேல் ஆகியும் அன்னதானக் கூடம் இதுவரை திறக்கப்படவில்லை. என்ன நோக்கத்திற்காக கட்டப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேறாமல் உள்ளது. அன்னதானக் கூடத்தை திறக்க அறநிலையத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பெய்த கனமழையால் திருக்கோயிலின் உபகோயிலான லட்சுமண தீர்த்த கோயிலை சுற்றி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி.நகர் ஸ்ரீ சக்ர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. பஞ்சமி நாளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar