Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நெல்லையப்பர் கோயிலில் ரூ.8 லட்சம் ... ஸ்ரீரங்கம், வேதையில் ஆடி அமாவாசை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குமரி பகவதியம்மன் கோயிலில் ஆடி களப பூஜை துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஆக
2011
11:08

கன்னியாகுமரி : கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் இன்று முதல் வரும் 12ம் தேதி முடிய ஆடி களபபூஜை நடக்கிறது. இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றான கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாடு மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோயிலில் நடக்கும் முக்கிய விழாக்களில் ஒன்றான ஆடி களபபூஜை இன்று (1ம் தேதி) தொடங்குகிறது. அம்பாள் அவதரித்த ஆடிபூரம் நட்சத்திரமான இன்று முதல் தொடர்ந்து 12 நாட்களும் அம்பாளை குளிர்விப்பதற்காக இப்பூஜை நடத்தப்படுகிறது. இப்பூஜையை முன்னிட்டு வழக்கம்போல் அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூபதரிசனமும், நிர்மால்யபூஜையும் நடக்கிறது. தொடர்ந்து 5 மணிக்கு அபிஷேகமும், 6.15 மணிக்கு தீபாராதனையும், 8 மணிக்கு ஸ்ரீபலியும், 8.15 மணிக்கு நிவேத்யபூஜையும் நடக்கிறது. களபபூஜையை முன்னிட்டு காலை 10 மணிக்கு எண்ணெய், தேன், பால், பன்னீர், இளநீர், குங்குமம், பஞ்சாமிர்தம், களபம் போன்ற பொருட்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது. பின்னர் ஜவ்வாது, அக்தர், புனுகு, பச்சை, கற்பூரம், பன்னீர், கோரோசனை போன்ற வாசனை திரவியங்களை ஒன்று கலந்து வெள்ளிகுடத்தில் நிரப்பி அதை சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. பின்னர் தந்திரி சங்கர நாராயணரூ அம்பாளுக்கு அபிஷேகம் செய்கிறார். தொடர்ந்து மதியம் 12.30 மணிக்கு அன்னதானமும் நடக்கிறது. மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகமும், 8.15 மணிக்கு பல்லக்கில் அம்பாள் எழுந்தருளி கோயில் வலம் வருதலும், தொடர்ந்து வெள்ளி சிம்பாசனத்தில் தாலாட்டும், ஆத்தாளபூஜை, ஏகாந்த தீபாராததனை ஆகியவை நடக்கிறது. இன்று முதல் வரும் 12ம் தேதி வரை நடக்கும் ஆடி களபபூஜையின் 13ம் நாளான (13ம் தேதி) அதிவாச ஹோமத்துடன் ஆடிகளபபூஜை நிறைவடைகிறது. ஆடிகளபபூஜையை காண ஏராளமான பெண்கள் கோயிலுக்கு வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், சித்திரை பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, 63 நாயன்மார்கள், ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: 100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்திய தாக்கத்தால் ராமேஸ்வரத்தில் பக்தர்கள், ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் சித்திரைப் பெருவிழாவின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில், பட்டாபிஷேக ராமர் சன்னதி உள்ளது. ஒவ்வொரு ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோவில், இன்று (ஏப்ரல் 23 )காலை 6:15 மணிக்கு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar