Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சதுரகிரியில் வெள்ளம்: பவுர்ணமி ... திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை மகா தீபம் திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் "அரோகரா கோஷத்துடன் ஒளிவீசிய கார்த்திகைத் தீபம்!
எழுத்தின் அளவு:
பழநியில்

பதிவு செய்த நாள்

26 நவ
2015
10:11

பழநி: பழநி மலைக்கோயிலில் பக்தர்களின் சரண கோஷத்துடன் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. பழநியில் கார்த்திகை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரியகார்த்திகையைமுன்னிட்டு பகல் 2 மணிக்கு சண்முகார்ச்சனையும், சண்முகர் தீபாராதனையும், 5.30மணி நடக்கும் சாயரட்சை பூஜை மாலை 4 மணிக்கு நடந்தது. தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரசுவாமி உலாவந்தார். யாகசாலையில் மகா தீபாரதனை நடந்தது. அதன்பின் தீபஸ்தம்பம் அருகேயுள்ள மண்டபத்திற்கு எழுந்தருளினார். மூலவர் ஞானதண்டாயுதபாணி சன்னதியில் இருந்து பரணி தீபம் எடுத்துவரப்பட்டு உட்பிரகாரத்தின் நான்கு மூலைகளிலும் தீபம் ஏற்றப்பட்டது. மாலை 6.15மணிக்கு மேற்கு வெளிப்பிரகாரத்தில் உள்ள தீபஸ்தம்பத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. பின்னர் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

பக்தர்கள் "வெற்றி வேல்முருகனுக்கு அரோகரா, பழநியாண்டவருக்கு அரோகரா என சரணகோஷங்களை எழுப்பினர். கூட்டத்தை கட்டுப்படுத்த மாலை 4 மணிக்குமேல் பக்தர்கள் மலைமேல் வர அனுமதிக்கப்படவில்லை. திருஆவினனன்குடி கோயில், பெரியநாயகியம்மன் கோயில்களில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு, சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. படிப்பாதை , திருஆவினன்குடிகோயில் உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். ஏற்பாடுகளை இணை ஆணையர் ராஜமாணிக்கம், உதவி ஆணையர் மேனகா செய்தனர்.

பக்தர்கள் காத்திருப்பு: "ரோப்கார் வின்ச் ஸ்டேஷனில் மட்டும் பக்தர்கள் 2 மணி மணிநேரம் வரை காத்திருந்து, மலைக்கோயிலுக்கு சென்றனர். காலையில் சென்ற பக்தர்கள் மாலையில் ஏற்றப்படும் கார்த்திகைத் தீபத்தை காண்பதற்காக, மலையிலேயே தங்கிவிட்டனர். இதனால் மலைக்கோயில் வெளிப்பிரகாரம் முழுவதும் பக்தர்கள் நிரம்பியிருந்தனர். பொதுதரிசன வழியில் 3மணி நேரம் வரை காத்திருந்து மூலவர் ஞான தண்டாயுதபாணியை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி 6ம் திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பொன்னேரி: திருப்பாலைவனம் பாலீஸ்வரர் கோவில் தேர் திருவிழாவின்போது, அச்சுமுறிந்து தேர் கவிழ்ந்ததில் ... மேலும்
 
temple news
பூந்தமல்லி: பூந்தமல்லியில், திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது.இங்கு, ... மேலும்
 
temple news
திருவாடானை: திருவாடானையில் திரவுபதி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பீமன் வேடத்தில் வீதிகளில் ... மேலும்
 
temple news
பெருமாநல்லூர்: பெருமாநல்லுார், கொண்டத்துக்காளியம்மன் கோவில் குண்டம் தேர் திருவிழா கடந்த 25ம் தேதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar