Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாலிதீன் பைகளில் உணவுகள் ... திருக்கழுக்குன்றம் கோவிலுக்குள் மழைநீர் தேக்கம்! திருக்கழுக்குன்றம் கோவிலுக்குள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திண்டுக்கல்லில் திருக்கார்த்திகை தீபவழிபாடு!
எழுத்தின் அளவு:
திண்டுக்கல்லில் திருக்கார்த்திகை தீபவழிபாடு!

பதிவு செய்த நாள்

26 நவ
2015
12:11

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் கார்த்திகை தீப விழாவையொட்டி கோயில்களில் விளக்குகள், சொக்கப்பனை ஏற்றப்பட்டது. திருவணணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்ட நேரத்தில், திண்டுக்கல்லில் உள்ள கோட்டைமாரியம்மன் கோயில், மலையடிவாரம் சீனிவாச பெருமாள் கோயில், நாகல்நகர் வரதராஜ பெருமாள் கோயில், புவனேஸ்வரி அம்மன் கோயில், ரயிலடி விநாயகர் கோயில், கோபாலசமுத்திரம் ஆஞ்சநேயர் உட்பட பல கோயில்களில் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபட்டனர்.  வீடுகளிலும், வீட்டு வாசல்களிலும் குத்துவிளக்கு, தீபம் ஏற்றி, பூ, பழம் வைத்து பெண்கள் வழி பட்டனர். பல கோயில்களில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. பல இடங்களில் வாணவேடிக்கைகள் நடத்தப்பட்டது.  தாண்டிக்குடி:தாண்டிக்குடி மற்றும் பண்ணைக்காடு பகுதியில் கார்த்திகை பெரு விழாவை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.  தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை மற்றும் விளக்குப் பூஜை, பஜன் நடந்தது. தொடர்ந்து சுவாமி சர்வ அலங்காரத்தில் காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

கானல்காடு பூதநாச்சியம்மன், பண்ணைக்காடு மயான காளியம்மன், முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாட்டுடன் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. மலைப்பகுதியை சேர்ந்த திராளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பெண்கள் தங்களது வீடுகளில் வண்ணமயமான கோலங்களிட்டு விளக்கு ஏற்றினர். கன்னிவாடி: திருக்கார்த்திகையை முன்னிட்டு தோணிமலை முருகன் கோயிலில், சிறப்பு பூஜைகள் நடந்தது. பாலாபிஷேகம், மலர் அலங்காரத்துடன் விசேஷ அபிஷேக  ஆராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70 வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மஹோத்சவம் ... மேலும்
 
temple news
காரைக்கால்: திருநள்ளாறு, குச்சனுார் சனீஸ்வரர் கோவிலில் நேற்று நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவில், ... மேலும்
 
temple news
கம்பம்; சனி பகவானை நினைத்து பயப்படத் தேவையில்லை. அவருக்கு பிடித்த நிறத்தை பயன்படுத்தினாலே அவரது ... மேலும்
 
temple news
பல்லடம்; நல்லது எது, கெட்டது எது என்பதை உணர்த்தவே சனிபகவான் நம்மை சோதிக்கிறார் என, பல்லடம் அருகில் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் சனி பெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar